பாடலாசிரியர் கபிலனின் மகள் தற்கொலைக்கு காரணம் என்ன?

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை கபிலன் நேற்று மாலை அவரது அரும்பாக்கம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இப்போது அவருடைய உடல் சென்னை சாலிகிராமம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாடலாசிரியர் கபிலன், நடிகர் விக்ரம் மற்றும் லைலா நடித்த தில் படத்தில் ‘உன் சமயலறையில்’ பாடல் மூலம் ஒரு பாடலாசிரியராக தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார். அதன் பின்னர் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால், சிம்பு படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் நடித்தும் இருக்கிறார்.

Also Read:உண்மையைச் சொல்லி கமலுக்கு சவால் விட்ட பாடலாசிரியர்.. விக்ரம் பட பாடலில் வந்த குழப்பம்

தூரிகை எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து இருக்கிறார். இவர் ஆங்கிலத்தில் ‘Being Women Magazine’ என்னும் இதழை நடத்தி வருகிறார். தன்னுடைய எழுத்துக்கள் மூலம் பெண்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்த இவர் வீட்டில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

தூரிகை நேற்று மாலை நான்கு மணி போல அவருடைய அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதை பார்த்த அவருடைய அம்மா உஷா அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்திருக்கிறார். அவர்களும் வந்து தூரிகையை மீட்டு சாலிகிராமம் மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

Also Read: ஆஸ்கார் நாயகனுக்கு சரியான நேரத்தில் உதவிய தனுஷ்.. எல்லா படத்திலும் இவருக்கு இது வேலையா போச்சு!

சாலிகிராமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தூரிகை அங்கே சிகிச்சை பலனின்றி இரவு இறந்து விட்டார் என்று கூறுகின்றனர். இதனை தொடர்ந்து மெடிக்கல் பார்மாலிட்டிஸ்க்காகவும், போலீஸ் விசாரணைக்காகவும் அவருடைய உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

பெண்களுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் கொடுக்கும் கட்டுரைகளை எழுதும் தூரிகை, எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என பதிவிட்ட தூரிகை இப்படி ஒரு முடிவு எடுத்தது ரொம்ப அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது.

Also Read: இன்றுவரை அவிழ்க்க முடியாத 7 சினிமா மரணங்கள்.. கொலையா, தற்கொலையா என விளங்காத மர்மங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்