கேப்டன் விராத் கோலியை மாற்றியதன் பரபர பின்னணி. முக்கியமான பல குற்றச்சாட்டுகள்.

மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலியின், பணிச்சுமையை குறைப்பதற்காக ரோகித் சர்மாவை, 20 ஓவர் போட்டிகளில் மட்டும் கேப்டனாக நிர்ணயித்தது பிசிசிஐ. அப்பொழுது ஒருநாள், மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலியே கேப்டனாக தொடருவார் என்றும் அறிவித்திருந்தது.

ஆனால் பிசிசிஐ இப்பொழுது, ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியை நீக்கிவிட்டு, ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கியமாக விராட் கோலி, செய்த பல தவறுகளை சுட்டிக்காட்டுகின்றனர்.

கேப்டன் கோலி செய்த முக்கியமான தவறுகள்: கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் அவர் சொல்லியதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் புதிய பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை தேர்ந்தெடுத்தது பிசிசிஐ. ஆனால் கும்ப்ளே எங்களுக்கு வேண்டாம் என்றும், பழைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தான் வேண்டும் என்றும் அடம்பிடித்து பிசிசிஐக்கு தனிப்பட்ட கடிதம் ஒன்றை கோலி அனுப்பியுள்ளார்.

Anil-Cinemapettai.jpg
Anil-Cinemapettai.jpg

இதனைக் கேள்விப்பட்ட அனில் கும்ப்ளே தானாக முன்வந்து பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். பின் வழக்கம் போல் பழைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் ஆட்டம் போட்டார் விராட் கோலி. இதனாலேயே பிசிசிஐ விராட் கோலியின் மீது அதிருப்தியடைந்தது.

தென் ஆப்பிரிக்கா தொடரில் பூஜாராவை அணியில் சேர்க்காதது. அனுபவ பவுலர் அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் கைவிட்டது. 2019 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சீனியர் வீரர்கள் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டியது போன்ற பல தவறுகளை செய்தார் விராட் கோலி.

Rohit-Cinemapettai-1.jpg
Rohit-Cinemapettai-1.jpg

இதனை அறிந்த சீனியர் வீரர்கள் போட்டி முடிந்தவுடன் விராட் கோலியை அணுக முடியவில்லை, அவர் வேறு உலகத்திற்கு சென்றுவிடுகிறார் என பிசிசிஐயிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இதனை எல்லாம் மனதில் வைத்து தான் பிசிசிஐ விராட் கோலியின் கேப்டன் பொறுப்பை, ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் பறித்துவிட்டு, ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்