Connect with us

தன் உயிரை கொடுத்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய ரயில்வே போலீஸ் அதிகாரி..

jagbir-singh-rana

India | இந்தியா

தன் உயிரை கொடுத்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய ரயில்வே போலீஸ் அதிகாரி..

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிர் சிங் ராணா எனும் ரயில்வே அதிகாரி தன் உயிரைக் கொடுத்து மூன்று பேர் உயிரை காப்பாற்றி உள்ளார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜக்பிர் சிங் ராணா எனும் ரயில்வே அதிகாரி தன் உயிரைக் கொடுத்து மூன்று பேர் உயிரை காப்பாற்றி உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஒன்பது 45 மணியளவில் கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் மிக விரைவாக வந்து கொண்டிருந்தது. ஆனால் தண்டவாளத்தில் ஒரு தம்பதியினர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கொஞ்சம் தூரத்தில் ஒரு குழந்தை தண்டவாளத்தின் அருகில் நின்று கொண்டிருந்தது.

அதனை பார்த்த ரயில்வே அதிகாரி அவர்களுக்கு கேட்கும்படி குரல் கொடுத்துள்ளார். மேலும் அருகில் இருந்த சக ஊழியர்கள் மற்றும் மக்களின் கையசைத்து குரல் கொடுத்துள்ளனர. ஆனால் தம்பதியர் இருவரும் அதனை கண்டுகொள்ளாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

அதனை பார்த்த ரயில்வே அதிகாரி ஜக்பிர் சிங் ராணா ஓடி சென்று அந்த தம்பதியினர் இருவரையும் தண்டவாளத்தை விட்டு போகும் படி கூறியுள்ளார். மேலும் அந்த குழந்தையை தண்டவாளத்தைவிட்டு நகர்த்தியுள்ளார். ஆனால் ஜக்பிர் சிங் ராணா ரயில் வருவதை சுதாரிப்பதற்குள் அவர் மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆனால் தன் உயிரைக் கொடுத்து ஒரு முழு குடும்பத்தின் உயிரை காப்பாற்றியது பெருமைப்படும் வகையில் இருந்தாலும் ஜக்பிர் சிங் ராணா இறப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

படத்தில் மட்டும்தான் தன்னுயிரைக் கொடுத்து மக்களை காப்பாற்றுவது போல காட்சிகள் இருக்கும் ஆனால் தற்போது ரயில்வே போலீஸ் அதிகாரி உண்மையிலேயே தன்னுயிரைக் கொடுத்து ஒரு குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top