Connect with us
Cinemapettai

Cinemapettai

rajini-kamal-kaala-viswaroobam2

Entertainment | பொழுதுபோக்கு

கோலிவுட்டை கலக்கும் ஸ்டார் நாயகர்களின் நிஜப்பெயர்கள்..

சினிமா எண்ட்ரிக்காக பெயர் மாற்றம் செய்வது அப்போது முதல் இப்போது வரை நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதில், நமக்கு பிடித்த ஸ்டார் நாயகர்களின் உண்மை பெயர்களை தெரிந்து தான் கொள்வோமே! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், ஸ்டைலிஷ் ஐகான் என இன்னும் இளம் நடிகர்களுடன் போட்டி கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவரின் பூர்வீகம் பெங்களூர். அம்மா குடும்ப தலைவி, அப்பா போலீஸ் கான்ஸ்டபிள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சிவாஜி ராவ் கைக்வாட். கே. பாலசந்தர் அபூர்வ ராகங்கள் படத்தின் டைட்டில் கார்டில் இவருக்கு ரஜினிகாந்த் எனப் பெயர் சூட்டினார். அதுவே இப்போது பலருக்கு தாரக மந்திரமாக மாறிவிட்டது.

தமிழ் மண்ணின் மைந்தன். அய்யர் குடும்பத்தில் பரமக்குடியில் பிறந்தவர் கமல்ஹாசன். அப்பா ஸ்ரீநிவாசன் வக்கீல், அம்மா குடும்பத்தலைவி. இவர் குடும்பமே ஹாசன் குடும்பம் என அழைக்கப்பட்டாலும், இவருக்கு பார்த்தசாரதி என பெயர் வைத்ததாக கமல் தனது பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். நான்கு வயதில் இருந்து சினிமாவில் இருக்கும் கமல்ஹாசன் தற்போது அரசியலிலும் கால் பதித்து விட்டார்.

திரை பின்னணியில் இருந்து சினிமாவில் கால் பதித்தாலும், சொந்த உழைப்பால் பல ரசிகர்களை தன் பின்னால் வைத்து இருப்பவர் சூர்யா. பழம்பெரும் நடிகர் சிவக்குமார் மூத்த மகன். சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகாவை காதலித்து கரம் பிடித்தார். இவருக்கு சிவக்குமார் வைத்த பெயர் சரவணன். இயக்குனர் மணிரத்னம் தான் இவருக்கு சூர்யா என்ற பெயரை சூட்டினார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானாலும் பெண்களின் கனவுகள் மொத்தமும் இன்று சூர்யா மட்டும் தான்.

புகழ்பெற்ற பரமக்குடியில் இருந்து கமல்ஹாசனுக்கு பின்னால் வந்தாலும் கடின உழைப்பால் பலரை கவர்ந்தவர் விக்ரம். ஈசியா நடிக்கிறதா நானா? நோ நோ ரிஸ்க் தான் என ஒவ்வொரு படத்திலும் யாரும் செய்ய தயங்குவதை செய்பவர். இவரின் உண்மையான பெயர் கென்னடி ஜான் விக்டர். கிறிஸ்டியன் தந்தைக்கும், இந்து தாயிற்கும் பிறந்தவர். இவருக்கு இவ்வளவு பெரிய பெயர் பிடிக்கவில்லை என்பதால் விக்டரில் இருந்து ’வி’, கென்னடியில் இருந்து ‘கே’, தனது சூரிய நட்சத்திரத்தில் இருந்து ’ராம்’ ஆகியவற்றை சேர்த்து விக்ரம் என மாற்றி கொண்டார். அந்நியன் படம் மூலம் மாஸ் ஹிட் அடித்த விக்ரமுக்கு சமீபத்தில் தான் 52 வயதாகியது குறிப்பிடத்தக்கது.

இளம் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், தற்போது ஹாலிவுட் ஸ்டார் என படிப்படியாக உயர்ந்து கொண்டு இருக்கிறார். ஆனால், இவரின் உண்மையான பெயரும் தனுஷ் இல்லை வெங்கடேஷ் பிரபு. முதல் படத்தில் அண்ணன் செல்வராகவனால் பிரபு என டைட்டில் கார்ட்டில் போடப்பட்டாலும், சில பல காரணங்களால் தன் பெயரை தனுஷ் என மாற்றி கொண்டார். தனுஷை விட தமிழ்நாட்டு புரூஸ் லீ என்ற செல்ல பெயர் தான் அவருக்கு செம மேட்சாக இருக்கிறது.

சற்று ஆச்சரியமான விஷயம் தான். வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் உண்மையான பெயரும் பிரகாஷ் ராஜ் இல்லையாம். பெற்றோர் வைத்த பெயர் பிரகாஷ் ராய். கே.பாலசந்தர் படத்தில் அறிமுகமானவருக்கு ராயை தூக்கி விட்டு ராஜ் என பெயர் மாற்றினார் பாலசந்தர். எந்த படம் என்றாலும் தன் பெஸ்ட்டை கொடுப்பது இவரது பழக்கம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top