Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த நிஜ பாக்ஸர்களை வைத்து சார்பட்டா பாக்ஸர் ரோல்களை ரெடி செய்த ரஞ்சித்.. போட்டோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த நிஜ பாக்ஸர்களை வைத்து சார்பட்டா பாக்ஸர் ரோல்களை ரெடி செய்த ரஞ்சித்.. போட்டோ உள்ளே

சார்பட்டா பீரியட் பிலிம், வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரம் பற்றிய படம். 70 களில் வட சென்னையின் பாக்சிங் கலாச்சாரத்தில் சார்பட்டா பரம்பரை மற்றும் இடியப்ப நாயக்கர் பரம்பரை என்பவர்களை மையப்டுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். இது ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் என மட்டும் சொல்லிவிட முடியாது. அந்த காலகட்டத்தில் உள்ள அரசியல் சூழல், மக்களின் வாழ்வாதாரம் என பலவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

இப்படத்தில் நடித்த ஆர்யா, பசுபதி, ஷபீர், ஜான் கோக்கனேன், ஜான் விஜய் போன்றவர்கள் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகின்றனர். இந்நிலையில் எந்த கதாபாத்திரம் எந்த நிஜ பாக்சரின் குணாதிசயத்துடன் ஒப்பிட்டு இயக்குனர் எழுதியுள்ளார் என வாங்க பார்ப்போம்.

ஆர்யா – கபிலன் – முகம்மது அலி

arya sarpatta muhamad ali

ஆம் ஆர்யாவின் பாக்சிங் ஸ்டைல் உலகப்புகழ் பெற்ற முகம்மது அலி அவர்களுடையது தான். அதனால் தான் “நீயே” பாடலில் கூட அலியின் பிரபல வசனமான “float like a butterfly, sting like a killer bee.” இடம்பெற்றுள்ளதாம்.

ஜான் கோக்கனேன் – வேம்புலி – மைக் டைசன்

john kokkenen inspired from tyson

படத்தில் ஆக்ரோஷமாக குத்துசண்டை செய்யும் வேம்புலியின் உடல் மொழி டைசனுடையது தானம். மேலும் அந்த ஆக்ரோஷம் மற்றும் முரட்டு தனத்தையும் தனது நடிப்பில் சேர்த்து வெளிக்கொணர்ந்துள்ளார் ஜான் கோக்கனேன்.

ஷபீர் – டான்சிங் ரோஸ்- பிரின்ஸ் நசீம்

dancing rose

ரசிகர்களின் மனதை அதிகம் கவர்ந்த ரோல் எனில் அது டான்சிங் ரோஸ் (Dancing rose) என்ற கதாபாத்திரம். பிரிட்டனை சேர்ந்த பிரின்ஸ் நசீம் அஹமத் தான் இந்த ரோலுக்கு இன்ஸபிரேஷன். ஸ்டைலாக நடப்பது, ஆடுவது எதிராளியை சீண்டுவது, நொடிப்பொழுதில் நாக் அவுட் செய்வது இவரது ஸ்பெஷாலிட்டி.

சந்தோஷ் பிரதாப் – ராமன் – ஜார்ஜ் போர்மன்

santhosh pratap role

சர்வேதேச பாக்சிங் உலகில் மிகவும் பிரபலமான ஜார்ஜ் போர்மன் அவர்களை முன்மாதிரியாக வைத்து தான் ராமன் ஸ்டைல் ரெடி செய்துள்ளாராம் ரஞ்சித்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top