அட ஆமாங்க இந்த ரியல் லைப் பாகுபலி சம்பவம் நடைபெற்றது கேரளாவில் தான். கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியாக்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோ.

பாகுபலி

தென்னிந்திய சினிமாவாக ஆரம்பித்து, இந்திய சினிமாவாக வளர்ந்தது பாகுபலி. பின்னர் இதன் இரண்டாம் பாகம் ரிலீஸின் பொழுதெல்லாம் உலக சினிமா ரசிகர்கள் உற்று நோக்கும் அளவிற்க்கு விஸ்வரூப வளர்ச்சி அடைந்தது இப்படம் . அனைவர் வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதாவது ஒரு கதாபாத்திரத்தால் இம்ப்ரெஸ் ஆகி தான் இருக்கிறார்கள். குழந்தைகள் படத்தில் வருவது போல் சண்டை போடுவதில் ஆகட்டும். கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் விளையாட்டாக படத்தின் வசனங்களை தங்கள் பேச்சில் பயன் படுத்துவது. என்று நம் அன்றாட வாழ்க்கையில் இணைந்து விட்டது என்றால் அது மிகை ஆகாது.

அதிகம் படித்தவை:  சாம்பியன்ஸ் கோப்பை- இந்தியா அதிரடி ஆட்டம்- 319/3 ; பாக். வெல்ல 320 ரன்கள் இலக்கு!
Bahubali 2 Poster
 ரியல் லைப் பாகுபலி

கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவரே பாகுபலியின் யானை ஸ்டண்ட்டை முயற்சி செய்துள்ளார். தொடுப்புழா அருகில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோவில் மது போதையில் உள்ள அந்த வாலிபர். யானையின் தந்தங்களை பிடித்து, தும்பிக்கை வழியாக மேலே ஏற முயற்சிப்பது நமக்கு தெரிகிறது. யானையுடன் நட்பு பாராட்டும் விதமாக அவர் பழங்களை வழங்குவதும் பதிவாகியுள்ளது. முதலில் சாதுவாக இருந்த யானை, பின்னர் அந்த வாலிபரை தூக்கி அடிப்பது நன்றாக பதிவாகியுள்ளது. அவரை நோக்கி நண்பர்கள் அலறி அடித்து ஓடுவதுடன் வீடியோ முடிகிறது.

அதிகம் படித்தவை:  மெர்சல் டீஸர்-செலிபிரிட்டி ரியாக்ஷன்-மெர்சலாக்கும் ட்விட்டர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. ஒருவர் பேஸ் புக் லைவ்வில் ஒளிபரப்ப, இப்பொழுது இந்த வீடியோ வைரல் ஆகிவிட்டது.

அந்த வாலிபர் இப்பொழுது மருத்துவமனையில் குணம் ஆகிவருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்பது இது தானோ ?