Connect with us

Cinemapettai

நான் தான் உண்மையான ஹீரோ – சரத்குமார் கூறுவது ஏன் தெரியுமா?

நான் தான் உண்மையான ஹீரோ – சரத்குமார் கூறுவது ஏன் தெரியுமா?

முன்னாள் நடிகர்சங்க தலைவரும் பிரபல நடிகருமான சரத்குமார் தன்னை ஒரு உண்மையான ஹீரோ என்று தனது டுவிட்டரில் வர்ணித்துள்ளார்.

ஒரு உண்மையான ஹீரோ யார் என்றால் அவர் இறந்த பின்னரும் அவருடைய உடலில் உள்ள முக்கிய பகுதிகள் இன்னொருவர் மூலம் இயங்கிக்கொண்டிருப்பதுதான். அந்த வகையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களே உண்மையான ஹீரோக்கள் என்று கூறப்படும் நிலையில் என்னுடைய உடல் உறுப்புக்களை நான் தானம் செய்துள்ளதால் நானும் ஒரு உண்மையான ஹீரோதான் என்று கூறியுள்ளார்.

இன்று அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி உலகம் முழுவதும் உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்பட்டு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் சரத்குமாரின் இந்த டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top