தனுஷுக்கு டஃப் கொடுக்க ரெடி.. சிம்புவுக்கு வரிசை கட்டி நிற்கும் படங்களின் லிஸ்ட்.. மிரட்டிவிட போகும் இயக்குனர்கள்

சின்ன வயசுலயே சினிமாவுக்கு வந்து சாதிச்சு மக்கள் மனசுல நின்னவங்கல்ல வரிசையில் நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி போன்றோர் இருந்தாலும் அடுத்த தலைமுறை நடிகர்களில் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர் சிம்பு.

80களில் டி.ராஜேந்தர் சினிமாவில் இயக்கம், திரைக்கதை, நடிப்பு, நடனம், இசை, பாடல் என்று ரவுண்டு கட்டி அடித்து, ரசிகர்களின் தனக்கெனத் தனியிடம் பிடித்த மாதிரி அவருடைய மகன் சிலம்பரசனையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து, இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

தனது அப்பாவைப் போன்றே இயக்கம், நடிப்பு, இசை, பாடல், பேச்சு என கலக்கி வரும் சிம்பு அன்பானவன், அசராதவன், அடங்காதவன் உள்ளிட்ட, நான் ராஜாவாத்தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்த நிலையில், மாநாடு படம் அவருக்கு பிரேக் கொடுத்தது.

தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். அடுத்து, கமலின் ராஜ்கமல் இன்டர்நேசனல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.டி.ஆர் 48 படத்தில் நடிக்கவுள்ளார். இதையடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் கான் என்ற படத்தில் நடிக்கிறார். இதையடுத்து, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

பல சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்து தற்போது முன்னணி இயக்குனர்களில் படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளதால் சிம்புவின் கேரியர் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், இணையதளத்தில் சிம்புவின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்து, STR 49 அல்லது STR 50 படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இப்படத்தை அஸ்வின் மாரிமுத்து இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் இயக்கி வரும் டிராகன் படத்தை முடித்த பின் இப்படத்தை சிம்புவை வைத்து இயக்கவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தனுசுக்கும் சிம்புவுக்கும்தான் போட்டி என்று கூறப்படும் நிலையில், தனுஷ் தேசிய விருது வாங்கி, ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். இந்த நிலையில், தற்போது, சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அவரது போட்டியாளர் சிம்புக்கு அவர் இனிமேல் அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் பெரிய வெற்றி பெறும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News