ஒரு படத்தால் நல்ல மார்க்கெட் உருவாவதும் அதே வேகத்தில் ஒரே ஒரு படத்தால் ஏறிய மார்க்கெட் சரிவதும் இங்கே வழக்கம் தான். அப்படி மாயா என்ற ஒரு படத்தால் ஏறிய நயன் மார்க்கெட் டோரா என்னும் ஒரு படத்தால் சரிந்துவிட்டது. மார்க்கெட் சரிந்ததால் தனது சொந்தப் படத்தை ரிலீஸ் செய்யவே முடியாமல் திணறுகிறார்.

எனவே தனது பிடிவாதங்களை தளர்த்தி அட்ஜஸ்ட் பண்ண ஓகே சொல்லிவிட்டாராம். தமிழில் மட்டுமே நடித்து வந்த நயன் இப்போது பிற மொழிகளிலும் நடிக்கத் தொடங்கி விட்டார். அதோடு இளம் ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி போட்டு வந்தவர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

பட விழாக்களுக்கும் வருவார் போலிருக்கிறது. இது மற்ற ஹீரோயின்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.