தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார்.

எனவே இவர் இனி முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க மாட்டார் என பரவலாக ஒரு தகவல் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது முற்றிலும் பொய் எனவும் எப்போதும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க தான் தயார் எனவும் நயன்தாரா கூறியுள்ளார்.

குறிப்பாக முன்னணி நடிகர்களில் விஜய் தனக்கு பிடித்தமான நடிகர் எனவும் அவருடன் நடிக்க எப்போதும் தயார் எனவும் நயன்தாரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.