Ready Player 1

71 வயது வாலிபன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்ற அடைமொழிக்கு ஏற்றவர். ஹாலிவுட் சினிமாவை இவர் அளவுக்கு யாரும் நேசித்திருக்க மாட்டார்கள். அத்தகையவர் கிட்டத்தட்ட 12 வருடம் கழுத்து மீண்டும் ஒரு சைன்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் 2011 எர்னஸ்ட் கிளின் என்பவர் எழுதிய ‘ரெடி பிளேயர் ஒன்’ நாவலின் தழுவல். எனவே தான் இப்படத்தின் மேல் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.

கதை

படத்தின் கதை 2049 இல் நடக்கிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனம் அமெரிக்காவை தன் வசமாகிவிட்டது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு ஒரே பொழுதுபோக்கு அல்லது வாழ்க்கை என்பது “ஒயாஸிஸ்” எனும் கேம் தான். இந்த கேம் விர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையில் விளையாட வேண்டும். தலையில் ஹெட் கியர் மாட்டிக்கொண்டு லாகின் செய்தால் அந்த உலகத்தில் நுழைந்து விடலாம். நமக்கேற்றார் போல் உடல், உடை என உருவாக்கிக்கொண்டு அங்கு வாழலாம். அமெரிக்காவில் பலர் நிஜ வாழ்க்கையை துறந்துவிட்டு இங்கே அடிமையாக கிடக்கின்றனர்.

Ready Player One

இந்த ஒயாசியை உருவாக்கியவர் இறந்து விட, மூன்று சாவியை வெவ்வேறு இடத்தில் வைத்துள்ளேன், அதன் மூலமாக தான் ஈஸ்டர் முட்டையை அடையமுடியும் என்றும், அதை கண்டு பிடிப்பவருக்கே எனது மொத்த சொத்தும், மற்றும் இந்த விளையாட்டின் உரிமையும் கிடைக்கும் என்று சொல்லிவிடுகிறார்.

பலரும் 5 ஆண்டுகளாக தேடி ஒரு சாவியை கூட கண்டு பிடிக்க முடியாத நிலையில் நம் ஹீரோ எவ்வாறு கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. ஒரு பெரிய கார்பொரேட் நிறுவனம் தன் ஆதிக்கத்தை மேலும் இந்த மக்கள் மேல் செலுத்த இந்த ஒயாசிஸின் உரிமையை பெற அணைத்து வழிகளையும் பயன் படுத்துகிறது.

இந்த உரிமை போராட்டத்தில் நம் ஹீரோவுக்கு ஒரு காதலி, நான்கு நண்பர்கள் என அசத்தலாக செல்கிறது கதை. இறுதியில் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்கிறது.

Ready Player 1
படத்தின் பிளஸ்

அனிமேஷன் டிசைன், கிராபிக்ஸ், சேசிங் மற்றும் சண்டைக்காட்சிகள், திரைக்கதையின் வேகம், பிண்ணனி இசை

படத்தின் மைனஸ்

இவர்கள் சொல்லும் பல விஷயங்கள் நாம் முன்பே அறிந்ததே, குழந்தைகளுக்கான படத்தை வேறு கோணத்தில் எடுத்துள்ளனர். 3 டி கன்வெர்ஷன் சில இடங்களில் நெருடலாக உள்ளது .

சினிமா பேட்டை அலசல்

இன்று மார்வெல்ஸ், டி சி காமிக்ஸ் போன்றவர்களின் படங்கள் தான் அதிக மக்கள் கூட்டத்தை திரை அரங்குக்கு எழுகின்றது. இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய இயக்குனர் இத்தகைய ஜானரில் படம் கொடுத்ததை நாம் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.

படத்தில் டெக்னோலஜி சம்பந்தப்பட்ட விஷயங்கள் எளிதில் புரிந்தாலும், பல இடங்களில் இவர் உபயோகப்படுத்தியுள்ள வீடியோ கேம், சினிமா படங்களின் காட்சிகளின் ரெபிரென்ஸ் சாமானிய சினிமா ரசிகனுக்கு புரிவதற்கான வாய்ப்பு கம்மி தான். படத்தில் ஹாரர் படமான “தி சயனிங்”, “சக்கி” மேலும் டெர்மினேட்டர், ஸ்டார் வார்ஸ், ஏலியன், ஸ்பீட் ரேசர் என பல விஷயங்களை அசாதாரணமாக சொல்லியுள்ளார். இது பலருக்கு புரியவில்லை என்பது தான் நிஜம்.

parzival
சினிமாபேட்டை வெர்டிக்ட்

குழந்தைகள் படமாக எடுக்க வேண்டிய கதையை பெரியவர்களுக்காக எடுத்துவிட்டார் இயக்குனர். கேம் பிரியர்கள், சினிமா வெறியர்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும், எனினும் சாமானிய ரசிகன், நாவலைப்படித்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

சினிமா பேட்டை ரேட்டிங் 3.5 / 5

எனினும் தியேட்டர் சென்று படம் பார்ப்பவருக்கு வேற்றுலகில் சென்று வந்த அனுபவத்தை இப்படம் கட்டாயம் கொடுக்கும்.