fbpx
Connect with us

நாளை ரீ-ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படங்கள். ஆச்சர்யத்தில் கோலிவுட்!

News | செய்திகள்

நாளை ரீ-ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படங்கள். ஆச்சர்யத்தில் கோலிவுட்!

(TFPC) தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அதிரடி முடிவின் காரணமாக ரிலீஸ் ஆக தயாராக இருந்த 6 புதுப்படங்கள் கடந்த வாரமே ரிலீஸ் ஆகவில்லை. இன்னும் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வராததால் தளபதி விஜயின் மெர்சல், சசிகுமாரின் கொடிவீரன் போன்ற படங்கள் தீபாவளிக்கு வருமா அல்லது வராதா என்று சினிமா ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

ஏற்கனவே பல திரையரங்குகள்  காட்சிகளை ரத்து செய்துவிட்டனர். மல்டிபளக்ஸ்களிலும் காட்சிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

ஜே எஸ் கே பிலிம் கார்ப்-

தயாரிப்பாளர் ஜே சதிஷ் குமார், தன் பானரில் பல புதுமுக இயக்குனர்களை அறிமுகப் படுத்தியவர், வித்தியாசமான கதை களம்  கொண்ட படங்களை ஆதரிப்பவர். இவரே இப்பொழுது உள்ள சூழ்நிலையை சரி செய்ய இந்தப் புதிய முயற்சியை எடுக்கிறார்.

வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் ராமின்  படைப்பான தரமணி படத்தை ரீ- ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். இதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்க, மீண்டும் வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகிறது “தரமணி”.

தரமணி படத்தை ரீ ரிலீஸ் செய்யும் தேட்டர்களின் லிஸ்டுடன், நாளை செய்தித்தாள்களில் வரும் போஸ்டரும் ரெடி ஆகிவிட்டது.

அதே போல் மாதவன், விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தை மறுபடி ரிலீஸ் செய்வதற்கும் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது.

இம்முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு, எப்படி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top