Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

கெத்து காட்டும் ஆர் சி பியின் வெற்றி ரகசியம் இது தான்- ஈ சாலா கப் நம்தே

ஐபிஎல் புதிய சீசன் துவங்கி அம்சமாக நடந்துகொண்டு இருக்கிறது. எப்பொழுதும் அசத்தும் சி எஸ் கே ஒருபுறம் சொதப்ப, இம்முமரை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு கலக்கி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆன விஷயம். கிரிக்கெட்டை கொண்டாடும் ஸ்டேட், ஆனால் இந்த டீம் 12 ஆண்டுகளாக கோப்பையை ஜெயித்தது கிடையாது. விராத் கோலி தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் சூப்பர் ஆன டீம் என பேச ஆரம்பிப்போம், ஆனால் பாதி லீக் ஸ்டெஜில் நாம் வெறுக்கும் அளவுக்கு சென்று விடும் இவர்களது ஆட்டம்.

இந்த சீசன் இவர்களது நிலை மாறியுள்ளது. 7 போட்டியில் 5 வெற்றி பெற்றுள்ளனர். 2014 இல் இருந்து இந்த தருணத்தில் அவர்கள் டீம் 3 வெற்றிகளுக்கு மேல் பெற்றது கிடையாது. ஆனால் இம்முறை சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதெராபாத், ராஜஸ்தான் என ஜாம்பவான் டீம்களை வென்றுள்ளது.

இந்த சீஸனும் தொடக்கம் தடுமாற்றமாக தான் இருந்தது. பார்திவ் படேல் டீம்மில் கீப்பர் ஆக ஆடும் பட்சம் ஒபெநிங் தான் வர முடியும், மத்திய வரிசையில் பெரிதாக அவர் பயன் பட மாட்டார். தேவதூத் பாடிக்கல் என்ற இளம் வீரரை  எடுத்தனர். அவர் துவக்க ஆட்டக்காரர், உள்ளூரில் கலக்கியவர். மேலும் கோலி ஒபெநிங் ஆடுவதை தவிர்க்க ஆஸ்திரேலியாவின் பின்ச் அணியில் சேர்க்கப்பட்டார். பின்ச், டீவில்லேர்ஸ், (கீப்பர்) பில்லிப்ஸ் மற்றும் ஸ்டைன் ஆடினர். ஆனால் இது டீமுக்கு ஏற்றதாக அமையவில்லை. பிலிப்ஸ் துவக்க ஆட்டக்காரர், அவர் மிடில் ஆர்டரில் தடுமாறினார். ஸ்டைன் அந்தளவுக்கு சூப்பர் பார்மிலும் இல்லை. இவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் மோரிஸ் முழு உடல் தகுதியில் இல்லை. ஆனால் செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யாமல், சுதாரித்துக்கொண்டனர்.

RCB

டீவில்லேர்ஸ் – சர்வதேச போட்டியில் இருந்து ஒய்வு பெற்றாலும் மனிதர் இன்றும் தரமான வீரர் தான். இவர் மீது அழுத்தம் அதிகம் இல்லை, வருடத்திற்கு பாதி நாட்களுக்கு மேல் ஓய்வில் தான் உள்ளார். பிலிப்ஸ் இடம் இருந்து விக்கெட் கீப்பிங் இவருக்கு சென்றது, எனவே பார்திவ் படேலின் தேவை எழவில்லை. அதிகம் பிட் ஆன வீரர்கள் உள்ளதால், பீல்டிங்கில் யாரும் இவரை மிஸ் செய்யவில்லை. இவரால் பாடிக்கல் தொடர்ந்து ஒபெநிங் ஆட முடிந்தது.

வாஷிங்டன் சுந்தர் – தமிழக ஆள் ரவுண்டர். பந்துவீச்சில் கலக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக கோலி இவரை பவர் பிலே நேரத்தில் அதிகம் பயன் படுத்தவில்லை. அது ஏன் என்பது யாருக்குமே தெரியாது. மும்பை போட்டியில் தான் ரோஹித்தின் விக்கெட்டை எடுக்க இவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இவரும் அதில் இருந்து அசத்தி வருகிறார். 4.63 என்ற ரன்விகிதம் கொடுத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார். பவர் பிலே ஸ்பெஷலிஸ்ட் என நிரூபித்து விட்டார்.

யுவேந்திர சாஹல் – அன்றும் இன்றும் இவர் தான் கோலியின் துருப்பு சீட்டு. இம்முறையும் நல்ல தன்னம்பிக்கையுடன் வீசி வருகிறார். மறுபுறம் பௌலர்கள் கை கொடுக்க, இவர் பேட்ஸ்மான்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

மோரிஸ் – ஸ்டைன் சொதப்ப, டீம்மில்  உதானா வந்து தான் இலங்கைக்கு செய்யும் அதே வேலையை கச்சிதமாக செய்து வருகிறார். இப்பொழுது மோரிஸ் வந்துவிட்டார். எனவே துவக்கம் மற்றும் கடைசியில் பௌலிங் போட்டு அசத்தி வருகிறார்.

நவ்தீப் சைனி – சிறப்பான பந்துவீச்சை பெங்களூரு அணியின் நவ்தீப் சைனி வெளிப்படுத்தினர். அதிகளவு ரன்களை விட்டுக்கொடுக்காத இவர் முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். எனவே கோலிக்குசூப்பர் பிளஸ் ஆகிவிட்டது.

சிவம் துபே – அதிரடி ஆல் ரவுண்டர். இதுவரை 8 ஓவர் வீசி 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார் அதுவும் 8.25 ரன் கொடுத்து. முக்கிய பந்துவீச்சாளர் சொதப்ப, இவரிடம் பால் தருகிறார் கோலி, அல்லது பார்ட்னெர்ஷிப் பிரேக் செய்ய உபயோகப்படுத்திக்கிறார். மும்பைக்கு பாண்டியா, கொல்கத்தாவுக்கு ரசல், ராஜஸ்தானுக்கு ஸ்டோக்ஸ் செய்யும் பணியை இவர் செய்து வருகிறார்.

மைதானங்களுக்கு ஏற்ப வீரர்களை, திட்டங்களை மாற்றி வெற்றிகளை குவித்து வருகிறது. சென்னை, ராஜஸ்தான் போன்ற டீம்கள் இந்தியாவில் அவர்கள் மைதானத்தில் ஆடுவதை மிஸ் செய்ய, பெங்களூரு அழகாக செட் ஆகிவிட்டனர். துடிப்புடன் கோலி, நல்ல ஸ்டாப் இருக்கின்றனர் பெங்களூரு டீமுடன். இப்படியே தொடரும் பட்சத்தில் விரைவில் பிளே ஆபுக்கு தகுதி பெற்றுவிடுவர் இந்த டீம்.

Continue Reading
To Top