Sports | விளையாட்டு
இந்த இருவரும் ஆர் சி பி டீம்மில் சூப்பர்- பாராட்டிய கோலி! காமெடி பண்ணாதீங்க ஜி
ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு போட்டிகளே பாக்கி உள்ளது. யார் கோப்பையை தட்டி செல்வார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மும்பை, டெல்லி, பெங்களுரு என அனைவரும் எதிர் பார்த்த டீம்கள் பிளே ஆப் நுழைந்தது. கொல்கத்தா / பஞ்சாப் வரும் என எதிர்பார்த்த சூழலில் ஹைதெராபாத் டீம் கடைசி வாரத்தில் கலக்கலாக விளையாடி தகுதி பெற்றது.
முதல் குவாலிபயர் போட்டியில் பெங்களூரு அணி ஹைதெராபாத் டீமிடம் தோற்றது. ஆர் சி பி டீம்மின் கோப்பை வெல்லும் கனவு இந்த ஆண்டும் தவிடு போடி ஆனது. கோலி கோப்பையை ஜெயிக்கும் வாய்ப்பு மீண்டும் பறிபோனது. இது ரசிகர்களுக்கு வருத்தமே.

RCB
இந்த போட்டி முடிந்த பின் விராட் கோலி தங்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு பேசினார். அப்பொழுது அவர் சொன்ன இந்த விஷயம் சற்றே சிலரை கடுப்பேற்றி உள்ளது.
“இந்த சீசனில் கடைசி 4 , 5 போட்டிகள் எங்களுக்கு ஏதுவாக அமையவில்லை. ஒரு சிலர் வாய்ப்பை பயன் படுத்தி சிறப்பாக ஆடினர், அவர்களுக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. தேவதத் படிக்கல் மற்றும் மொகாமாத் சிராஜ் இருவருக்குமே எனலாம். வழக்கம் போல டிவில்லேர்ஸ் மற்றும் சஹால் சிறப்பாக ஆடினர். டீமிற்கு சில நல்ல விஷயங்கள் நடந்தது. குறிப்பாக தேவதத் அசத்தலாக மற்றும் திறனுடன் விளையாடினார். 400 ரன்கள் எடுப்பது அந்தளவுக்கு சுலபம் இல்லை.” என பேசினார்.
தேவதத் படிக்கல் அவர்களை பாராட்டியது அனைவருக்கும் ஓகே தான். சிராஜ் பற்றி பேசியதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக அவர் நன்றாக வீசவில்லை. ஒரு சில ஸ்பெல் மட்டுமே நன்றாக வீசினார். அதற்கு வாஷிங்டன் சுந்தர் 6 எகனாமியில் தான் வீசினார், சைனி கலக்கலாக பந்து வீசினார். இவர்களில் யாரையாவது கோலி சொல்லி இருக்கலாம் என்கின்றனர்.
