RCB

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலியின் தலைமயில் பெங்களூரு அணி கிரிக்கெட் திருவிழாவான ஐபில் இன் 11-வது சீசனில் விளையாட தயாராக உள்ளது. தலை சிறந்த கேப்டன், பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள், திறன் வாய்ந்த உள்ளூர் வீரர்கள் என உள்ள போதிலும் பெங்களூரு இதுவரை கப் ஜெயிக்கவில்லை எண்பத்து ஆச்சர்யம். இம்முறையாவது கோலி கோப்பையை வெல்வாரா என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வி.

இந்நிலையில் இந்த அணியில் இளம் லெக் ஸ்பின்னர் யுவேந்திர சாஹல் வீடியோ ஒன்றை தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அப்லோட் செய்துள்ளார். இந்த வீடியோவில் கேப்டன் கோலி,மெக்குலம் மற்றும் சாஹல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவில் நடனமாடுவது படமாக்கப்பட்டுள்ளது.

இந்த விடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.