அம்பயரின் தவறால் 6 ரன் வித்தியாசத்தில் தோற்றது ஆர் சி பி. கடுப்பில் விராட் கோலி. குழப்பத்தில் ஐபில் ரசிகர்கள்.

பெங்களுருவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற கோலி, பௌலிங் தேர்ந்தெடுத்தார். மும்பை அதிரடியாக ஆடியது. பவ்ரபிளேயில் இந்த டீம் 50 கடந்தது. எனினும் சாஹல்பந்துவீச்சு மும்பை இந்தியன்ஸ் ரன் விகிதத்தை குறைத்து. அவர் 38 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். (யுவராஜ் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர் விளாசினார்)

இறுதியில் ஹர்திக் பாண்டியாவின் உதவியுடன் ( 14 பாலில் 32 ) இந்த டீம் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குப்பித்தது. ரோஹித் சர்மா 48 , சூரியகுமார் யாதவ் 38 , யுவராஜ் சிங், டி காக் தலா 23 ரன்கள் குவித்தனர்.

அடுத்து சேஸிங்கில் ஆரம்பித்திலேயே மொயின் அலி துரதிருஷ்ட விதமாக ரன் அவுட் ஆனார். பார்திவ் படேல் (22 பாலில் 31 ) எடுத்தார். கோலி மற்றும் ஏ பி டீவில்லேர்ஸ் நல்ல பார்ட்னெர்ஷிப் அமைத்தனர். எனினும் பும்ராவின் பந்தில் 14 வது ஓவரில் 32 பந்தில் 46 ரன் எடுத்த கோலி அவுட் ஆனார். மறுபுறம் டீவில்லேர்ஸ் அதிரடியாக ஆடினார்.

கடைசி ஐந்து ஓவரில் 61 ரன் என்ற நிலை இருந்தது. மலிங்கா வீசிய 16 வது ஓவரில் 20 ரன்கள். பும்ராவின் அடுத்த ஓவர் 1 ரன், 1 விக்கெட். பாண்டியாவின் 18 வது ஓவரில் 18 ரன்கள் சென்றது.

கட்சி இரண்டு ஓவரில் 22 எடுத்தால் வெற்றி. எனினும் பும்ரா 5 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

மலிங்கா வீசிய கடைசி தேவை 17 . முதல் பலே இளம் வீரர் துபே சிக்ஸர் அடித்தார். 6 – 1 – 1 – 1 – 1 – 0 . கடைசி பால் சிக்ஸ் அடித்து சூப்பர் ஓவர் செல்லும் என எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றம்.

MALINGA

எனினும் ரி பிளே பார்க்கும் பொழுது கடைசி பால் நோ பால் என தெரிந்தது. நடுவர் அதை கைவைக்க தவிறிவிட்டார். நெஹ்ரா வேகமாக உள்ளே வந்து நாலாவது நடுவரிடம் பேச ஆரம்பித்தார். கோலி டென்சன் ஆகிவிட்டார். அந்த பாலை நடுவர் கவனித்திருந்தால். பிரீ ஹிட் கிடைத்திருக்கும். மேலும் கடைசி பாலில் சிக்ஸ் அடித்தால் வெற்றி, பௌண்டரி அடித்திருந்தால் சூப்பர் ஓவர் சென்றிருக்கும்.

பெங்களூரு ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்துடன் தான் வீடு திரும்பினர்.

ரோஹித் ஷர்மா பேசுகையில் “சத்தியமாக பின்னர் தான் தெரியும். இது போன்ற தவறுகள் நடப்பது ஆட்டத்துக்கு ஏற்றது இல்லை. முன்பு பும்ரா வீசிய ஓவரில் கூட வயட் தந்தனர். ” என்றார்.

விராட் கோலி பேசுகையில் ” இது கிளப் க்ரிக்ர்ட் அல்ல ஐபில் .. அது மிகவும் மோசமான செயல். நடுவர் கண்ணை திறந்து வைத்து பார்த்திருக்க வேண்டும். ஒரு இன்ச் அளவு பெரிய நோ பால் அது. வித்யசமாக உள்ளது. சின்ன மார்ஜின் பெரிய மாறுதல். என்ன நடக்குது என்றே தெரியவில்லை. நடுவர்கள் அதிக கவனத்துடன் உன்னிப்பாக இருக்க வேண்டும்.” என்று பொரிந்து தள்ளினார்.

Leave a Comment