fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கிறிஸ்டன், நெஹ்ராவை நீக்கிவிட்டு, புதிய பயிற்சியாளரை நியமித்த ஆர் சி பி. ஐபில் அப்டேட்

Sports | விளையாட்டு

கிறிஸ்டன், நெஹ்ராவை நீக்கிவிட்டு, புதிய பயிற்சியாளரை நியமித்த ஆர் சி பி. ஐபில் அப்டேட்

ஐபில் பொறுத்தவரை அப்படி என்ன தான் இந்த டீம்மின் மீது உள்ள சாபக்கேடு என்பது புரியாத புதிர் தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அன்றும், இன்றும், என்றுமே சிம்ம சொப்பனமாக டீம் தான். விசுவாசமான ரசிகர்கள், கேப்டனாக விராட் கோலி. ஏ பி டிவிலேயேர்ஸ் என பல பிளஸ் உண்டு இந்த டீமுக்கு. ஆனால் ஏனோ கோப்பை மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது.

கடந்த சீசனில் பேட்டிங் மட்டும் பௌலிங் கோச்சாக இருந்த கேரி கிறிஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா இருவரையும் நீக்கிவிட்டது நிர்வாகம். முன்னாள் நியூஸிலாந்தின் பயிற்சியாளர் மைக் ஹெசன் அவர்களை டைரக்டர் ஆப் கிரிக்கெட் ஆகவும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் சைமன் காட்டிச் அவர்களை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளனர். இந்த இருவருக்குமே சர்வதேச அளவை தாண்டி ஐபில் இல் கூட அதிக அனுபவம் உண்டு.

 

2015 இல் தொடங்கி, கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் காட்டிச். காரிபியன் பிரீமியர் லீக்கில் ஆடும் ட்ரினிபாகோ நைட் ரெய்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கூட, கப்பும் ஜெயித்துளார். எனினும் ஒப்பந்தம் முடிந்ததும் மீண்டும் இவரை தக்கவைக்கவில்லை KKR (ப்ரெண்டன் மக்குளம் நியமிக்கப்பட்டார் பயிற்சியாளராக) . இவர் தான் பெங்களூரு அணியின் கோச்சாகிறார்.

மைக் ஹெசன் இவர் நியூஸிலாந்து டீம் (6 வருடங்கள்) மற்றும் ஐபில் இல் பஞ்சாப் அணிகளுக்கு கோச்சாக இருந்துள்ளார். இவர் டைரக்டர் பொறுப்பில் இருந்த படி டீம் பில்டிங், டாலேண்ட் சேகரிப்பு, யுக்திகளை வகுப்பது, பாலிசி வகுப்பது என நிர்வாகம் செய்வாராம் டீம்மை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top