புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள விவாகரத்தா.? மீண்டும் ட்ரெண்டிங்கில் ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடி

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான மகாலட்சுமி கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். செப்டம்பர் மாதம் நடந்த இவர்களுடைய திருமணம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அனைத்து சேனல்களிலும் இந்த ஜோடியின் பேட்டிகள் தான் வைரலானது.

அது மட்டுமின்றி இந்த ஜோடி எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அது மீடியாவில் இடம் பிடித்தது. அதேபோல் தான் இப்போது ஒரு விஷயம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதாவது திருமணம் நடந்து ஒரு வருடம் முடிவதற்குள்ளாகவே இந்த ஜோடி விவாகரத்து வாங்க போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.

Also read: தனக்குத் தானே வைத்த ஆப்பால் பறிபோன 10 கோடி.. வெங்கட் பிரபு ஆசையில் மண்ணை வாரி போட்ட படம்

ஏனென்றால் ரவீந்தர் அண்மையில் தான் மட்டும் தனியாக இருக்கும் ஒரு போட்டோவை தன் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். எப்போதுமே ரவீந்தர் போடும் பதிவிற்கு முதல் ஆளாக லைக், கமெண்ட் போடும் மகாலட்சுமி இதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டவில்லை. இதை பார்த்த பலரும் இவர்கள் பிரிந்து விட்டதாக கூற ஆரம்பித்தனர்.

அதைத்தொடர்ந்து மீண்டும் இவர்கள் இருவரும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தனர். ஏற்கனவே விஜய் டிவி ஜோடியான விஷ்ணு, சம்யுக்தா திருமணமான ஒரு மாதத்திலேயே பிரிந்து விட்டனர். அவர்களுடைய குடும்ப பஞ்சாயத்து தான் இப்போது அதிர்வலையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Also read: சூரியை பார்த்து மீண்டும் பழைய ட்ராக்கிற்கே வந்த சந்தானம்.. கைவசம் இத்தனை படங்களா?

இந்நிலையில் ரவீந்தர், மகாலட்சுமி ஜோடியின் விவாகரத்து செய்தியும் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. அதை தொடர்ந்து மகாலட்சுமி தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இந்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, டேய் புருஷா எத்தனை முறை தனியாக இருக்கும் போட்டோவை பதிவிட வேண்டாம் என்று சொன்னேன்.

இப்ப நாம பிரிந்து விட்டோம் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இனி நீங்க இந்த தப்பை செய்தால் என்னுடைய சேமியா உப்புமாவை சாப்பிட வேண்டி வரும் என்று பதிவிட்டிருக்கிறார். மேலும் இன்னுமா நாங்க ட்ரெண்டிங்கில் இருக்கிறோம் என்று விளையாட்டாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் இந்த விவாகரத்து செய்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அனைவரின் வாயையும் அடைத்துள்ளார்.

Also read: குடும்ப சண்டையை கன்டென்ட்டாக மாற்றிய விஷ்ணு-சம்யுக்தா.. பதிலடி கொடுத்த மாமாக்குட்டி

- Advertisement -

Trending News