Connect with us

Cinemapettai

சகட்டுமேனிக்கு வர்ணனை செய்த சஞ்சய் மஞ்சுரேக்கரை நேரடியாக கழுவி ஊத்திய ரவீந்திர ஜடேஜா. இது வெறும் ஆரம்பம் தான் .. இருக்கு ஒய் உனக்கு கச்சேரி ..

Sports | விளையாட்டு

சகட்டுமேனிக்கு வர்ணனை செய்த சஞ்சய் மஞ்சுரேக்கரை நேரடியாக கழுவி ஊத்திய ரவீந்திர ஜடேஜா. இது வெறும் ஆரம்பம் தான் .. இருக்கு ஒய் உனக்கு கச்சேரி ..

ஒரு தலையாக வர்ணனை செய்வதாக ஏற்கனவே பல முறை சஞ்சய் மஞ்சுரேக்கர் மீது பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இம்முறை உலகக்கோப்பையில் இது தொடர்கதை தான்.

மஞ்சுரேக்கர் ஐபில் சமயத்திலேயே ஒரு தலையாக மும்பை இந்தியன்ஸ் டீம் பார்வையில் மட்டுமே வர்ணனை செய்தது நமக்கு தெரியும். அதே போல தனக்கு பிடிக்காத வீரர்கள் பற்றயும் கேவலமாக பேசுவது இவர் ஸ்டைல்.

கடந்த முறை கூட வெஸ்ட் இண்டீசின் கிரோன் பொல்லார்ட் இவரது பேச்சு “வார் த்தை வயிற்றுப்போக்கு” (verbal diarrhoea ) என கூறினார்.

tweet

இந்த உலகக்கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் மார்க்கெட்டிங் மேனேஜர் போல தான் இருந்தது இவர் பேச்சு.

அதுமட்டுமன்றி தோனியின் பேட்டிங், ஷமி டீம்மில் தேவையா, வாய்ப்பை வீணாக்கும் ராகுல் என லிஸ்ட் மிக அதிகம்.

அதே போல தான் ரவீந்திர ஜடேஜா பற்றிய இவரின் கருத்தும், ” நான் அரைகுறை திறன் உடைய வீரர்களின் ரசிகனல்ல. ஒரு நாள் போட்டிகளில் அவரின் நிலை இது தான். ஜடேஜா டெஸ்ட் போட்டியில் சிறந்த பௌலர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்யவே விரும்புவேன்,” எனத் தெரிவித்திருந்தார் சஞ்சய் மஞ்சரேக்கர். அதாவது ஆல் ரௌண்டார் என்ற கணக்கில் அவரை சேர்க்கமுடியாது என்பதே அது.

அதற்கு பதிலடி தரும் விதமாகவே ஜடேஜா இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

”நான் உங்களைவிட இரு மடங்கு போட்டிகள் விளையாடியிருக்கிறேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வார்த்தை வயிற்றுப்போக்கை போதுமானளவு கேட்டுவிட்டேன்,” என ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்திருக்கிறார்.

இதனை பலரும் ஆதரித்தும், ஆமோதித்தும் வருகின்றனர்.

ஸ்டாட்ஸ் – 37 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 2043 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1994 ரன்களும் எடுத்துள்ளார்.

ஜடேஜா இதுவரை 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1485 ரன்களும் 151 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2035 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 192 விக்கெட்டுகளும் ஒருநாள் போட்டிகளில் 174 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top