குஜராத்தில் நடைபெற்ற உள்ளூர்  டி 20    போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தியுள்ளார். ஆம், ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங்குக்குப் பிறகு ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளார் ஜடேஜா.

குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில், ஜாம் நகர் அணி மற்றும் அம்ரேலி அணிகள் மோதின.

இப்போட்டியில் ஜாம்நகர் அணிக்காக விளையாடிய ரவிந்திர ஜடேஜா 10 சிக்சர், 15 பவுண்டரிகளை விளாசினார். இவர், ஆம்ரலி அணியின் வேகப்பந்துவீச்சாளர் நிலாம் வம்ஜா வீசிய போட்டியின் 15வது ஓவரில், 6 பந்தில் தொடர்ந்து 6 சிக்சர் விளாசி சாதித்தார். 69 பந்துகளில் 154 ரன்கள் குவித்தார்.

ஜாம்நகர் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய ஆம்ரலி அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து, 121 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதுவரை சர்வதேச கிரிக்கெட்/ முதல் தர போட்டிகளில்  5 பேட்ஸ்மேன்கள் இம்மைல்கல்லை அடைந்துள்ளனர். ஆறாவதாக ஜடேஜா இணைந்துள்ளார்.

சர் கார்ஃபீல்டு சாபர்ஸ்

ரவி சாஸ்திரி

ஹெர்ஷேல்ல கிப்ஸ்

யுவராஜ் சிங்

அலெக்ஸ் ஹேல்ஸ்

ரவீந்திர ஜடேஜா

இவர்கள் மட்டும் அல்லாது வெஸ்ட் இண்டீசின் பொல்லார்ட், இங்கிலாந்தை சேர்ந்த கிளார்க் ஆகியோர் அடித்துள்ளனர். எனினும் அவை முதல் தர போட்டிகளுக்கு கீழ் உள்ள ஆட்டங்கள் ஆகும்.