fbpx
Connect with us

விஜய்யை வைத்து இது போல ட்ரெண்டிங் செய்வது அவசியமா ? வருத்தத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட அஸ்வின். வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யை வைத்து இது போல ட்ரெண்டிங் செய்வது அவசியமா ? வருத்தத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட அஸ்வின். வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

ரவிச்சந்திரன் அஸ்வின் எப்பொழுதுமே ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர்.
கிரிக்கெட் , தமிழகம், சினிமா, நபர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து, ரசிகர்களுடன் சாட்டிங் என இருப்பவர். யாரேனும் தன்னை கிண்டல் செய்தால் கூட நாசுக்காக பதில் சொல்லி அடுத்தவரின் வாயை அடைத்துவிடும் வல்லமை உடையவர். இவரது சமயோஜிதமான டிவீட்க்கென்று பல ரசிகர்கள் உண்டு. சுமார் 10 மில்லியன் ரசிகர்கள் வைத்துள்ளார் ட்விட்டர் பக்கத்தில்.

சமீபகாலமாக ட்விட்டரில் சில ரசிகர்கள், தங்கள் ஹீரோவை பெருமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் சக நடிகர்களை பற்றி தரக்குறைவாக பேசுவது, ஹாஷ்டாக் இட்டு அசிங்கப்படுத்துவது என்பது ட்ரெண்ட் ஆகிவிட்டது. மற்ற ஹீரோக்களை விட அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மாத்தி மாத்தி மீம்ஸ் போடுவது, அசிங்கப்படுத்துவது என்பதை அதிகம் செய்து வருகின்றனர். இதனை முன்னிலை படுத்தி தான் அஸ்வின் ட்வீட் தட்டியுள்ளார்.

“விண்கல் நம் பூமியை இடிக்காமல் தள்ளி சென்றது, நாடெங்கிலும் மழை வெவ்வேறு இடங்களில் பேரிடர் புரிகிறது, சில இடங்களில் பஞ்சம், வெளியே சொல்லவே தயங்கும் அளவுக்கு கொடூரமான சம்பவகள் நடக்கிறது, ஆனால் நம்ம ஊர் இளசுகள் விஜய் பற்றிய தவறான விஷயத்தை ட்ரெண்ட் ஆக்குகிறார்கள்.” இவர்களை என்னவென்று சொல்வது என ஸ்டேட்டஸ் தட்டினார்.

இவர் சொல்ல வந்த விஷயம் சரி தான் என்றாலும்,  அதில் அவரே அந்த ஹாஷ்டாக்கை உபயோகப்படுத்தியது என்பது தவறு, சுகிறீன் ஷாட் எடுத்து போட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் குறை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

அடப்பாவிங்களா அஸ்வினுக்கே கூக்லியா ?

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top