Sports | விளையாட்டு
புதிய ஐபில் டீம்மில் இணைகிறாரா ரவிசந்திரன் அஸ்வின் ? அட என்னப்பா சொல்றீங்க
இந்தியாவின் தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஷ்வின். மனிதர் கடந்த இரண்டு சீசன்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். இரண்டு முறையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7-ம் இடமும், 6-ம் இடமும் பிடித்தது. இரண்டு வருடங்களிலும் துவக்கம் சூப்பராகவும் கடைசிக்கட்டத்தில் சொதப்பியதால் பிளே ஆப் தகுதி பெற முடியாமல் போனது. கேப்டனாக அவர் செயல்பட்ட 28 ஆட்டங்களில் பஞ்சாப் அணி 12-ல் வெற்றியும் 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. எனவே கேப்டனில் இருந்து அவரை நீக்கவும் வேறு அணிக்கு விட்டுக்கொடுக்க முடிவு செய்ததாம் டீம் நிர்வாகம்.
அஸ்வினை வாங்க டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆர்வம் காட்டியுள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் ஏலத்தொகையான ரூ. 7.60 கோடி பணமாக கொடுத்து டெல்லி வாங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாம்.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், புனே சூப்பர் ஜயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு ஆடியுள்ளார் அஸ்வின். 139 ஐபில் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 125 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.( 6.79. ) விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகுமாம்.
R Ashwin is set to join Delhi Capitals for IPL 2020, with KL Rahul the favourite to be appointed captain of Kings XI Punjab #IPL
More to follow… pic.twitter.com/jScRsOIoKt
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 3, 2019
அதே போல் பஞ்சாப் அணியின் கேப்டனாக கே எல் ராகுல் நியமிக்கப்படுவாராம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
