டீம் தோல்விக்கு காரணமான அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின். பீதியுடன் வேடிக்கை பார்த்த எதிர் அணி வீரர்கள்

ரவிச்சந்திரன் அஸ்வின் – இவரை பொறுத்தவரை சர்வதேசம், ஐபில், க்ளப் கிரிக்கெட் என எதுவாக இருப்பினும் தனது 100 % கொடுப்பவர். கிரிக்கெட்டின் ரூல்ஸ் அனைத்தும் ஒன்று விடமால் தெரிந்து வைத்து பின்பற்றுபவர். இதனை நாம் ஏற்கனவே பல தருணங்களில் பார்த்துள்ளோம்.

டி.என்.பி.எல்.  2019 சீசன் குவாளிபயர்ஸ் ஸ்டேஜில் உள்ளது. அஸ்வின் திண்டுக்கல் ட்ரகன்ஸ் டீம் கேப்டன். பந்துவீசுவதோடு மட்டுமன்றி இம் முறை மனிதர் பேட்டிங்கிலும் மூன்றாம் இடத்தில இறங்கி அதிரடியாக ஆடி வருகிறார்.

நேற்றய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங் எடுத்தனர். சிறப்பான துவக்கம். கங்கா ஸ்ரீதர் ராஜு 81 . இறுதியில் சசிதேவின் (19 பாலில் 26) அதிரடியால் டீம் 169 எடுத்து. சேஸிங்கில் காரைக்குடி அணி இறுதியில் ஐந்து ரன் வித்தியாசத்தில் தோற்றது. எனவே அவர்கள் எலிமினேட்டர் 2 ஆட வேண்டிய சூழலில் உள்ளது. அழகான சேசிங் தான் செய்து வந்தனர் இந்த டீம். ஜெகதீசன் 37 , ஹரி நிஷாந்த் 29 , அஸ்வின் 22 , விவேக் 20 என ஆடினாலும் யாரும் இறுதி வரை நின்று வெற்றியை பெற்று தரவில்லை.

ஆர் , விவேக் அதிரடியாக ஆடி வந்தார். அந்த சமயத்தில் முருகன் அஸ்வின் ஓவரில் பந்தை தொடர்ச்சியாக இரண்டாவது சிக்ஸர் அடித்தார். எனினும் அந்த நேரத்தில் அஸ்வின் கிரீஸில் நகர, நடுவர் அவரிடம் பேச்சு கொடுத்து பந்து வீசுவதை கவனிக்கவில்லை. மேலும் அவர் டெட் பால் என சொல்லியும், யாரும் கவனிக்காமல் பந்தும் வீசப்பட்டு, சிக்சருக்கும் பறந்தது. எனினும் நடுவர் அதனை டெட் பால் என அறிவித்தார். அந்த நேரத்தில் அஸ்வின் அம்பயரிடம் பேசினார்.

பின்னர் தன் டீம் தோற்ற பின்  மீண்டும் வந்து நடுவராக அவர் செய்த தப்பை சுட்டிக்காட்டினார். அந்த நேரத்தில் எதிர் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக இருந்த அஸ்வினை பார்த்த படியே இருந்தனர். பின்னர் ஜென்டில் மேனாக எதிர் அணி வீரர்களுடன் கை குலுக்கிவிட்டு வெளியேறினார். எனினும் ப்ரேசெண்டேஷன் நேரத்திலும் இது போன்ற அம்பயரிங் தவறு நடக்க விடக்கூடாது எனவும் சொல்லி சென்றார்.

சில நேரம் ரூல்ஸ் நமக்கு சாதகமாகும், சில நேரம் பாதகமாகும். வாழ்க்கை ஒரு வட்டம் தானே அஸ்வின்.

Leave a Comment