R Ashwin

இந்தியா ஆஸ்திரேலியா மோதிய முதல் ஒரு நாள் போட்டியில், தல தோனி மற்றும்  ஹர்டிக் பாண்டியா ஆட்டத்தால், இந்தியா வெற்றி பெற்றது. எனினும் செப்டெம்பர் 17, தன் 31 வது பிறந்தநாளை கொண்டாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடாதது சென்னை வாசிகளுக்கு வருத்தமே. கவுண்டி போட்டிகளில் விளையாடிக்கொண்டிருக்கும் அஸ்வின் தன் ரசிகர் ஒருவருக்காக ஹாஸ்ப்பிட்டாலிட்டி பாக்ஸில் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

43 வயதான பி.வெங்கடேசன், கிட்னி சம்பந்தப்பட்ட நோயால்  பாதிக்கப்பட்டவர். வரும் நவம்பர் மாதம் இவரது தங்கையின் கிட்னி  பொறுத்தப்படவுள்ளது. கிரிக்கெட் வெறியரும், அஷ்வினின் தீவர ரசிகர்.

அவர் கூறுகையில்,” நான் இதுவரை காலரியில் இருந்து மட்டும் தான் மேட்ச் பார்த்துள்ளேன். அஸ்வின் அவர்களால் தான் நான் இந்த இடத்தில் இருந்து பார்க்க முடிகிறது, அவருக்கு எனது நன்றிகள். இந்நிகழ்வை நான் வாழ் நாள் முழுக்க மறக்கமாட்டேன்.”

ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் ” இதை நாங்கள் பப்ளி சிட்டிக்காக செய்யவில்லை. எங்கள் பவுண்ட் டேஷனின் நோக்கமே, அடுத்தவரை மகிழ்வித்து பார்ப்பதுதான். வெங்கட் கிரிக்கெட் விரும்பி, அவருக்காக எங்களால் முடிந்தது.”

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: சூப்பர் ப்ரோ நீங்க, மீண்டும் உங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயராக பார்க்க ஆவலோடு இருக்கோம்.