Prithvi Shaw

இவர் வலதுகை பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர் ஆவார். மும்பையை சேர்ந்த இவரை சச்சின் டெண்டுல்கருடன் பலரும் ஒப்பிடப்படுகிறார். விராட் கோலி போலவே 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் தலைவர் மற்றும் கோப்பையை வென்றவர் இவர். அதிரடி பேட்டிங்குக்கு பெயர் போனவர்.

prithvi shaw

இந்தியத் அணி இங்கிலாந்துசுற்றுப் பயணம் மேற்கொண்டஇந்திய அணியில் கடைசி இரண்டு போட்டிகளுக்கு இடம் பிடித்தார். ஆனால் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அக்டோபர் 4, 2018 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதலாவது போட்டியை ராஜ்கோட்டில் ஆடினார். மேலும் அதில் நூறு ரன்கள் அடித்தார். இதன்மூலம் மிக இளம் வயதில் (18 ஆண்டுகள் 329 நாட்கள்) அறிமுகப் போட்டியில் நூறு அடித்த இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். அதுமட்டுமன்றி தனது முதல் ரஞ்சி, துலீப் மற்றும் சர்வதேச போட்டியில் சத்தம் அடித்தும் சாதனை படைத்தார்.

Prithvi Shaw

ஆட்டத்தின் ஜெயிக்கும் ரன்னை அடிக்கும் இரண்டாவது இளம் வீரர் ஷா. (பேட் கம்மின்ஸ் ஆஸி) இன்று முடிந்த தொடரில் மேன் ஆப் தி சீரிஸ் விருதையும் பெற்றார். இவர் இரண்டு போட்டிகளில் மூன்று இன்னிங்க்சில் 237 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 118 . ஸ்ட்ரிக் ரேட் 94 ஆகும். இவர் பேட்டிங்கை பார்த்த பலரும் சச்சினின் ரன் குவிக்கும் திறன், ஷேவாகின் அதிரடி இந்த பையன் என்று சொல்லி வருகின்றனர்.

RaviShastri
RaviShastri

இந்நிலையில் இன்று ஆட்டம் முடிந்த பின் ரவி ஷாத்ரி ஷா பற்றி பேசியுள்ளார்…
“ஷா பிறந்ததே கிரிக்கெட் விளையாட தான். 19 வயது தான் என்றாலும் அவர் 8 வயதில் இருந்து கிரிக்கெட் ஆடுகிறார். சோ பத்து வருடங்கள் முதலீடு செய்துள்ளார். முதலில் அவரை பார்த்த பொழுது எனக்கு ஒரு சாயலில் சச்சின் மற்றும் வேற சாயலில் ஷேவாகின் நினைவு வந்தது. அவர் நடக்கும் பொழுது லாராவின் சாயல் உள்ளது.

தன்னடக்கத்துடன் இதே போல ப்ராக்டிஸ் செய்து வந்தால் சிறப்பான எதிர் காலம் உள்ளது அவருக்கு.” என்று கூறியுள்ளார்.