கடந்த ஒரு வருடகாலமாக இந்திய அணியில் இடம் பிடிக்கமுடியாமல் தவித்துவந்த சுரேஷ் ரெய்னா, கடந்த ஆண்டின் இறுதியில் யோ-யோ டெஸ்டில் தேர்வு செய்யபட்டார், அதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெறாத ரெய்னாவுக்கு T20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பை இவர் நன்றாகவே பயன்படுத்தி கொண்டார் என்றே சொல்லவேண்டும் அதுவும் கடைசி போட்டியில் அதிரடியாக 43 ரன்கள் விளசியதுடன் ஒரு விக்கெட்டையும் எடுத்து அசத்தினார்.

ரெய்னா அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடுவது ரெய்னாவின் பழக்கம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக வெளுத்து வாங்கிய ரெய்னா ஒரு நாள் போட்டியில் இடம் பெற தீவிர முயற்ச்சி மற்றும் பயிற்சி எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ரெய்னா பற்றி பேசியுள்ளார் ரவி சாஸ்திரி, ரெய்னா ஆக்ரோஷமான வீரர், இவர் பயமின்றி விளையாட கூடியவர் இது தான் எனக்கு அவரிடம் பிடிக்கும் என கூறியுள்ளார், நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பிடித்திருப்பதால் தனது திறமையை நிருபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ஆனால் அதை பொருட் படுத்தாமல் தனது அதிரடியிலேயே ஆடி வருகிறார் என ரவி சாஸ்திரி புகழ்ந்துள்ளார்.