Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘மிக மிக அவசரம்’ ஒரு ஷோ கூட கிடைக்கல.. தியேட்டர் உரிமையாளர்கள் அடாவடித்தனம்
சமீபகாலமாக சர்ச்சை பேச்சுகளில் அடிக்கடி காணப்படுபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன். இவர் படம் ரிலீஸ் செய்கிறாரோ இல்லையோ அதற்கு போராடுவதை அடிக்கடி யூடியூப் சேனல்களில் சொல்லிக் கொண்டு வருகிறார். சின்ன மீடியாக்களில் பிரயோஜனமில்லை என தெரிந்து கொண்டு இன்று தியேட்டர் ஒன்றை கடன்வாங்கி பத்திரிக்கையாளர்களை அழைத்து தன் வேதனையை சொல்லி கொண்டிருக்கிறார்.
மிக மிக அவசரம் என்ற படத்தை ரவீந்திரன் தயாரித்து இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால் தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தினால் இன்றைய வெளியீட்டை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார். இவர் நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை தயாரிக்க இருந்து பின் டிராப் செய்த கதை அனைவரும் அறிந்ததே.
தமிழ்நாடு முழுவதும் மிக மிக அவசரம் படத்திற்கான முதல் ஷோ முதல் டிக்கெட்டை தானே எடுத்துக் கொள்வதாகவும், மேலும் படத்தின் லாபத்தை தனக்கு தர வேண்டாம் எனவும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு காட்சியாவது போடுங்கள் என தியேட்டர் அசோசியேஷன் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களிடம் கெஞ்சி வருகிறார். இருந்தும் அதற்கான பலன் இல்லை. ஆனால் படத்தைப் பற்றிய கருத்து பாசிட்டிவ் ஆகவே இருந்தது.
தமிழ்நாட்டில் பிரபலமாக ஒரு பத்து டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இருப்பதாகவும், இனிவரும் காலங்களில் அந்த பத்தில் ஒன்றாக நான் மாற வேண்டும் அப்போதுதான் நல்ல படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் என்றும் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
தன்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், சிறிய படங்களை தயவு செய்து யாரும் எடுக்க வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இவரது பேட்டியில் அடிக்கடி சங்கத்தமிழன் படத்தை பற்றி இழுத்ததால், அந்த தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம் என கூறுகிறார்கள்.
