Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராட்சசன் இயக்குனரின் அடுத்த படத்தில் மாஸ் ஹீரோ.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!
Published on
விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருருப்பார், சைக்கோ படமாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முண்டாசுபட்டி படத்தை இயக்கிய ராம் குமார் தான் இந்த படத்தையும் இயக்கினார் இந்த நிலையில் அடுத்ததாக அவர் யாருடன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இந்த நிலையில் அவர் அடுத்ததாக தனுஷ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார் இதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது, மேலும் தனுஷுடன் இந்த படத்தை முடித்த பிறகு முண்டாசுப்பட்டி படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
