Connect with us
Cinemapettai

Cinemapettai

ராட்சசன் 2 தயாராகிறதா? ஹீரோ, இயக்குனர் பதிவிட்ட லேட்டஸ்ட் அப்டேட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ராட்சசன் 2 தயாராகிறதா? ஹீரோ, இயக்குனர் பதிவிட்ட லேட்டஸ்ட் அப்டேட்

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இவரது படத்தில் கண்டிப்பாக ஏதாவது சிறப்பம்சம் இருக்கும் என ரசிகர்கள் நம்பிச் சென்று பார்க்கக் கூடிய நடிகர்களில் இவரும் ஒருவராக மாறிவிட்டார்.

இதில் விஷ்ணு விஷாலுக்கு இரண்டு சூப்பர் ஹிட் படங்களான முண்டாசுப்பட்டி, ராட்சசன் வழங்கியவர் இயக்குனர் ராம்குமார். இதில் ராட்சசன் படத்தின் கதையை முதலில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து 17 ஹீரோக்களுக்கு அந்த கதையை கூறியுள்ளார் ராம்குமார். 18 ஆவதாக விஷ்ணு விஷால் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம்.

இந்நிலையில் இந்திய அளவில் ராட்சசன் படம் மூன்றாம் இடத்தையும், தமிழ் சினிமாவில் முதல் இடத்தையும் ஐஎம்டிபி ரேட்டிங்கில் பெற்றுது. இதை பற்றி பலரும் ட்விட்டரில் பேசிவந்தனர்.

ratsan 2 tweet

அந்த நேரத்தில் தான் ஹீரோ விஷ்ணு விஷால் ஸ்கிரிப்ட் ரெடியா என இயக்குனரிடம் கேட்க, அவ்ரும் தயாராகிக் கொண்டிருக்கிறது என பதில் சொல்லியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top