fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மாஸ்டர் படத்தில் நான்- லைக்ஸ் குவிக்குது ரத்தின குமார் தட்டிய எமோஷனலான ஸ்டேட்டஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தில் நான்- லைக்ஸ் குவிக்குது ரத்தின குமார் தட்டிய எமோஷனலான ஸ்டேட்டஸ்

மாஸ் ஹீரோவான தளபதி விஜய்யின் மாஸ்டர் படம், பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா மற்றும் சில வெளிநாடுகளிலும் ஹிட் அடித்துள்ளது. ரசிகர்களின் பேரார்வத்தால் மூன்றே நாளில் அனைத்தையும் சேர்த்து ரூபாய் 100 கோடியை வசூலை தாண்டிவிட்டதாம். இந்த் வெற்றிக்கு முழு காரணம் இந்த இளமையான டீமுக்கு தளபதி கொடுத்த முழு சுதந்திரம் தான்.

இப்படத்தை எழுதி இயக்கியது லோகேஷ் கனகராஜ் தான், எனினும் கூடுதல் திரைக்கதை அமைக்க மற்றும் வசனங்கள் எழுத பொன் பார்த்திபன் மற்றும் ரத்தினகுமார் இருவரையும் இணைத்தார். மேயாத மான் மற்றும் ஆடை படத்தை இயக்கிய ரத்தினகுமார் தளபதி மீது உள்ள வெறி மற்றும் நண்பர் லோகேஷுக்காக இப்படத்தில் கமிட் ஆனது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.

ரத்தினகுமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“கடந்த சில வருடங்களுக்கு முன்னால் விஜய் சாரின் படங்களின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பது எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் சில டிக்கெட்டுகளுக்காக சூரிய உதயத்துக்கு முன் எதிரி வீட்டுக் கதவை கூட தட்டியிருக்கிறேன். ஆனால் இந்த வருடம் ஒரு தளபதி படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கிறேன்.

தளபதி படத்தில் என் பெயரையும் என் முகத்தையும் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. மாஸ்டர் படத்தின் வாய்ப்பளித்த லோகேஷ் கனகராஜுக்கும், என்னை இத்தனை ஆண்டுகாலம் நம்பிய என் பெற்றோருக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளை தந்த நண்பர்களுக்கு என்னுடைய நன்றி.”

rathna kumar fb post

வாழ்த்துக்கள் ப்ரோ. உங்களின் அடுத்த பட அப்டேட்டுக்காக வைட்டிங்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top