fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் விக்னேஷ் சிவனை வம்புக்கு இழுக்கும் ராதாரவி..! நயன்தாரா சர்ச்சை பேச்சுக்கு மிரட்டலான பதிலடி

radharavi

News | செய்திகள்

மீண்டும் விக்னேஷ் சிவனை வம்புக்கு இழுக்கும் ராதாரவி..! நயன்தாரா சர்ச்சை பேச்சுக்கு மிரட்டலான பதிலடி

கொலையுதிர் காலம் பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராதாரவி நயன்தாராவை பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திமுகவின் கட்சியிலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இரு தினங்களுக்கு முன்பு எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்னும் குறும்படத்தின் வெளியீட்டு விழாவில் ராதாரவி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி நயன்தாராவை பற்றி பேசியதற்கு கருத்து தெரிவித்தார். அதில் எனக்கு பயமே கிடையாது என் குடும்பத்திற்கு யாருக்கும் பயம் கிடையாது எனக் கூறினார்.

மேலும் நான் கொலையுதிர் பட நிகழ்ச்சியில் பேசியது தவறு இல்லை என்னும் அளவிற்கு கருத்து தெரிவித்தார். அதாவது நான் சந்தித்தது ஒரு பிரச்சனையே இல்லை மேலும் நயன்தாராவைப் பற்றி பேசியது உண்மை இருக்கா இல்லையா உண்மையாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் இல்லை என்றால் விட்டு விட வேண்டியது தான்.

மேலும் நான் பேசும் போது அங்கு கூடி இருந்த அனைவரும் கைதட்டினர். அது பொய்யாக இருந்தால் அந்தக் கூட்டத்தில் யாராவது ஒருத்தராவது என்னிடம் கேள்வி கேட்டு இருப்பார்கள். என் கேள்வி கேட்கவில்லை என கூறினார்.

மேலும் நான் என்ன கொலைக்குற்றம் பண்ணி விட்டேன் என கேள்வி எழுப்பினார் இதற்கு பல தரப்பினரும் ராதாரவிக்கு அவர் சொல்வது உண்மைதானே எனக் கூறி வருகின்றனர். மேலும் ராதாரவி பேசியதற்கு அடுத்தடுத்து பதில் அளித்த விக்னேஷ் சிவன் நயன்தாரா பற்றி கருத்து தெரிவித்த ராதாரவிக்கு என் பதில் அளிக்கவில்லை என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top