Connect with us

Videos | வீடியோக்கள்

இருக்குறவன் இல்லாதவன அடிச்சா ஆண்டவனா இருந்தாலும் அடி தான்.. அனல் பறக்கும் ரத்தசாட்சி டீசர்

ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஜெயமோகனின் கதையில் உருவான ரத்தசாட்சி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் பல கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதில் இப்போது ரத்த சாட்சி என்ற கதையை படமாக எடுத்துள்ளனர். ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

கண்ணன் ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், மெட்ராஸ் சார்லஸ் போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரித்திருக்கும் இந்த ரத்த சாட்சி படம் மிக விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Also Read : நாவலாக வந்து சூப்பர் ஹிட்டடித்த 5 படங்கள்.. பொன்னியின் செல்வனுக்கு போட்டி போட்ட 3 பேர்

இந்தப் படம் அதிகார வர்க்கத்தின் ஒடுக்கு முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 1980களில் மக்களை எப்படி கொத்த அடிமைகளாக வைத்து வேலை வாங்கினார்கள் என்பதை படமாக எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவர் வருகிறார்.

அதில் நம்முடைய உரிமைகளை நாம் தான் கேட்டு வாங்க வேண்டும், அப்படி கொடுக்கவில்லை என்றால் அவர்களிடம் பிடுங்க வேண்டும் என்று பல அழுத்தமான வசனங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இருக்கிறவன் இல்லாதவன அடிச்சா ஆண்டவனா இருந்தாலும் அடிதான் என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.

Also Read : விடுதலை படத்தால் பதட்ட நிலையில் இருக்கும் பிரபலம்.. வெற்றிமாறன் செய்யும் தில்லாலங்கடி வேலை

இவ்வாறு ஜெய்பீம் போன்ற ஒரு உணர்ச்சிகரமான படமாக ரத்தசாட்சி எடுக்கப்பட்டிருப்பது இந்த டீசர் வாயிலாக தெரியவந்துள்ளது. கண்டிப்பாக சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக இந்த படம் அமைய இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : விக்ரம் படத்தை மிஞ்சும் பிரமோஷன்.. விரைவில் வெளிவர உள்ள தளபதி 67 டீசர்

Continue Reading
To Top