Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராட்சசன் வில்லன் சரவணன் தான்.! ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா.? அதுவும் இந்த சீரியல் நடிகர்
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ஒரே மாதிரியான படங்கள் வெளியாகின்றது என பெரிய குற்றச்சாட்டு இருந்து வந்தது இந்த குற்றச்சாட்டை தகர்த்துள்ளது சமீபத்தில் வெளியாகிய சில திரைப்படங்கள் அதில் ஒன்று ராட்சசன் திரைப்படமும்.
ராட்சசன் திரைப்படம் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகி இருந்தது இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது மேலும் அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்தது இந்த திரைப்படம்.
இத்திரைப்படத்தில் சைக்கோ கதாபாத்திரம் தான் மிகவும் சஸ்பென்ஸாக இருந்தது அதில்பராஸ்தடிக் மேக்கப் போட்டிருந்ததால் நடித்தது யார் என்றே தெரியாமல் இருந்தது. பின்பு நடந்த சக்சஸ் மீட்டில் தான் ராட்சசன் வில்லன் சரவணனை அறிமுகபடுத்தினார்கள்.
அதேபோல் அந்த படத்தில் பிளாஸ் பேக் காட்சியில் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் குலதெய்வம் சீரியலில் நடித்த யாசர் தான் என தெரியவந்துள்ளது இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இவரா என ஆச்சிரியமடைந்துள்ளர்கள்.
