fbpx
Connect with us

ராட்சசன் திரைவிமர்சனம்.!

Reviews | விமர்சனங்கள்

ராட்சசன் திரைவிமர்சனம்.!

ராட்சசன் திரைவிமர்சனம்.!

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் தான் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள், அப்படி குறும் படம் மூலம்சிலர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்கள், அந்த வகையில் முண்டாசுப்பட்டியில் காலடி எடுத்து வைத்தவர் ராம்குமார் இவரின்அடுத்த படைப்பு தான் ராச்சசன், முண்டாசுப்பட்டி படத்திற்கு மக்களே கலந்துள்ள இந்த ராச்சசன் எனப் பார்க்கலாம்.

படத்தின் ஹீரோ விஷ்ணு இவர் ஒரு பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்பது லட்சியம்மாக இருக்கும், அதேபோல் இவரின் முதல் படம் ஒரு சைக்கோ படமாக இருக்க வேண்டும் அதற்காக மிகக் கடுமையாக உழைக்கிறார் இதற்காக உலகில் உள்ள பல சைக்கிள்களில் லிஸ்ட்டை சேகரித்து வருகிறார், இப்படியே சேகரித்து வருகையில், விஷ்ணுவின் அப்பா போலீஸ் ஆக இருந்துள்ளார் இவர் திடீரென இறந்துவிடுகிறார், அதனால் போலீஸ் வேலை விஷ்ணுவை தேடி வருகிறது, தனது குடும்பத்தின் வறுமையின் காரணமாக இந்த போலீஸ் வேலையை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

இங்குதான் கதை சூடு பிடிக்கிறது சென்னையில் தொடர்ந்து சில பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகிறார்கள் , இந்த கோர சம்பவம் தமிழக காவல் துறைக்கு பெரும் சவாலாக அமைகிறது, இதனால் காவல்துறைக்கு பெரிய தலைவலி ஏற்படுகிறது, விஷ்ணு தனது சினிமாவிற்காக எடுத்து வைத்த பல தகவல்கள் இந்தக் கேஸ்சிற்கு உதவுகிறது அந்த சைக்கோ தேடி அலைகிறார் விஷ்ணு, அந்த சைக்கோவை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

விஷ்ணுவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் தற்போது இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் அனைத்தும் மக்களுக்கு பிடித்தது போல் ஆகிவிடுகிறது அந்த வகையில் நேற்று இன்று நாளை ராட்சசன் என வித்தியாசமான கதைக்களம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், மேலும் படத்தின் முனிஸ்காந்த் நடித்துள்ளார் அவர் இதுவரை காமெடி ரோலில் நடித்த பார்த்திருப்போம் ஆனால் இந்த படத்தில் எமோஷனல் காட்சியில் வந்து அனைவரையும் கண் கலங்க வைத்து விடுகிறார், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படம் ஆனால் ஒரு காட்சியில் கூட உங்களுக்கு சலிப்பு ஏற்படாது, அடுத்து என்ன செய்கிறார், யார் செய்கிறார் என்று உங்களை பரபரப்பாக வைத்துள்ளார்கள் இயக்குனர்.

இந்த திரைப்படம் சைக்கோ கதை என்பதால் கண்டிப்பாக ஒரு பிளாஷ்பேக் இருக்கும், அந்த பிளாஷ்பேக்கில் மிக அழுத்தமான கதையை வைத்துள்ளார் இயக்குனர், படத்தின் ட்ரபேக் என்றால் படம் கொரியன் திரைப்படத்தை நினைவூட்டுகிறது, மேலும்விஷ்ணு இசை வைத்து சைக்கிள் கண்டுபிடிக்கும் செய்யும் முயற்சிகள் அனைத்தும் கொரியன் படத்தை நினைவுக்குக் கொண்டு வரும்,

மற்றபடி இந்த வருடத்தில் பெஸ்ட் சைக்கோ திரைப்படம் என்றால் அந்த லிஸ்டில் இந்த திரைப்படம் கண்டிப்பாக இருக்கும், படத்தின் ரியல் ஹீரோ என்றால் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் இவர் ஒவ்வொரு நொடிக்கும், இசையில் நம்மை பதற்றத்திலேயே வைத்துள்ளார். மேலும் படத்தின் பிளஸ் என்றால் திரைக்கதை, பின்னணி இசை, ஒளிப்பதிவு, கொலைகாரனுக்கு அழுத்தமான பிளாஷ்பேக் கதை.

ஆசிரியர் தனது ஆசைக்கு மாணவிகளை எப்படி இணங்க செய்கிறார் என்பது பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு,படத்தின் மைனஸ் என்றால் ஒரு சில காட்சிகள் மட்டும் ஏற்கனவே பார்த்தது போல் இருக்கும், மேலும் படத்தில் சைக்கோ கொலைகாரன் போலீஸ் விரட்டுகிறது ஆனால் விஷ்ணுவின் காதலி மற்றும் அவருக்கு உதவி செய்யும் ராதாரவியை தேடிக் கொலைகாரன் கொள்ள துடிப்பது எப்படி என்று தெரியவில்லை.

மொத்தத்தில் ராட்சசன் படத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

ராட்சசன்: 3/5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top