Tamil Cinema News | சினிமா செய்திகள்
முன்னணி நடிகருடன் இணையும் ராட்சசன் பட இயக்குனர்
Published on
தனுஷ் கைவசம் பல படங்கள் இருக்கின்றன, கௌதம் வாசுதேவ இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை இரண்டாம் பாகம், அசுரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து தனுஷ் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் தனுஷ் 34 வது படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் தனது 35-வது படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இந்த திரைப்படத்தை ராட்சசன் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த ராம்குமார் தான் இயக்க இருக்கிறார் இதை அதிகாரப்பூர்வமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
