Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் ஹீரோ யார் தெரியுமா? அப்போ உலக லெவெல் ஹிட் தான்
ராட்சசன் – முண்டாசுப்பட்டி ராம்குமாரின் இரண்டாவது படம். காமெடி ஜானரில் முதல் படம் என்றால் முற்றிலும் வித்தியாசமாக இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வைரல் ஹிட் அடித்தது.
பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் மற்றும் அனுபமா பரமேஷ்வரன் நடிப்பில் ‘ராக்ஷசடு’ என தெலுங்கு ரிமேக்கும் ஹிட் தான். இந்த படத்தின் ஹிந்தி உரிமையை ஹீரோ விஷ்ணு விஷால் தான் வைத்துள்ளார்.
இந்நிலையில் முன்னணி பாலிவுட் ஹீரோ ஆயுஷ்மான் குராணா நடிப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டதாம். சமீபத்தில் அந்தாதுன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர்.
#BreakingNews : Bollywood promising actor #AyushmannKhurrana to star in Hindi remake of #RATSASAN.
One of best thriller movie in tamil starring @TheVishnuVishal@Amala_ams
More details about the project soon.. @ayushmannk @taran_adarsh @KomalNahta pic.twitter.com/UDcixxvZxV
— AKHIL R KRISHNAN (@Urtrulyakhil) December 4, 2019
மேலும் ஆர்டிகிள் 15 என்ற படத்தில் ஐபிஸ் அதிகாரி ரோலில் நடித்து கலக்கியவர். இவர் நடிக்கும் பட்சத்தில் கட்டாயம் படம் வேற லெவல் ஹிட் அடிக்கும்.
