Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ரஷ்மிகா மந்தனா செய்த திருட்டு வேலை.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்
தற்போதைக்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா தான். கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
விரைவில் தமிழில் அறிமுகமாக உள்ளார். முதல் படமே கார்த்தி நடிப்பில் ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் மூலம் வரவுள்ளார்.
இந்த படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் இருந்துவரும் நிலையில் விரைவில் இந்த படப்பிடிப்புகளை முடித்துவிட்டு வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்க உள்ளதாம் படக்குழு.
இது ஒருபுறமிருக்க ரஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டியில் திருட்டுத்தனம் செய்த வேலையை கூறிய நிலையில் அது ரசிகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நடிகை இப்படி செய்யலாமா என அறிவுரை கூறி வருகின்றனர்.
அப்படி என்ன செய்தார் என்றுதானே கேட்கிறீர்கள். ஒருமுறை ஒரு ஹோட்டலில் தங்கும்போது அந்த ஹோட்டல் அறையில் உள்ள தலையணை உறை பிடித்ததால் அதை தன்னுடைய பேக்கில் போட்டு எடுத்துக் கொண்டு வந்து விட்டாராம்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குபவருக்கு ஒரு தலையணை உறை வாங்க வழி இல்லையா என கிண்டல் செய்கிறார்கள் சமூக வாசிகள்.
