fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கார்த்தி 19 பட டைட்டிலை ஸ்டேட்ஸில் பகிர்ந்த ராஷ்மிகா மந்தானா. கடுப்பில் படக்குழு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கார்த்தி 19 பட டைட்டிலை ஸ்டேட்ஸில் பகிர்ந்த ராஷ்மிகா மந்தானா. கடுப்பில் படக்குழு

கார்த்தி 19 – படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இரண்டாவது படம். கார்த்தியுடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். காமெடிக்கு யோகி பாபு. இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை. ஆன்டனி ரூபென் எடிட்டிங்.

இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கி நடந்து வருகின்றது. மேலும் முன்பே இப்படத்தின் தலைப்பு “சுல்தான்” என கிசுகிசுத்தனர். எனினும் படக்குழு இன்றும் கார்த்தி 19 என்பதையே சொல்லி வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ கூட வெளியே வராமல் பாதுகாப்பாக உள்ளனர் படக்குழு.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரோலிங் ஸ்டாட்ஸ்சில் சுல்தான் நான்காம் நாள் ஷூட்டிங் என்றும், கெட் அப் போட்டோ நீங்க பார்க்க முடியாதே என உடையின் போட்டோவை அப்லோட் செய்தார்.

Insta story of Rashmika Mandanna

என்ன மேடம் உங்க லுக் எப்படி என சொல்லமால் உஷாரா இருக்கீங்க, ஆனால் படத்தின் தலைப்பை போட்டு உடைச்சு வைச்சுடீங்க, என நெட்டிசன்கள் செல்லமாய் கலாய்த்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top