Tamil Cinema News | சினிமா செய்திகள்
இவரைத்தான் எனக்கு ரொம்ப புடிக்கும்.. வெளிப்படையாகச் சொன்ன ராஷ்மிகா மந்தனா
தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியக்கூடிய நடிகையாக பிரபலமானார்.
தமிழில் இவருக்கு பெரிய அளவு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ராஷ்மிகா மந்தனாவிற்கு தமிழில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
எப்போதுமே சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அவரது சமூக வலைப்பக்கத்தின் மூலம் நேரடியாக ரசிகர்களிடம் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ஐபிஎல் போட்டி நடக்கும் போது, நீங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு சப்போர்ட் செய்து வந்தீர்கள், மேலும் இந்த வருடம் ஐபிஎல் கப்பு ராயல் சேலஞ்சர்ஸ் தான் அடிக்கும் எனவும் கூறினீர்கள்.

ms dhoni rashmika mandanna
உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரர் பிடிக்கும் என அந்த ரசிகர் கேட்டுள்ளார். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பற்றி பெருமையாக பேசியதால் விராட் கோலியை தான் பிடிக்கும் என கூறுவார் என எதிர்பார்த்தனர்.
ஆனால் ராஷ்மிகா மந்தனா எனக்கு கிரிக்கெட்டில் எம் எஸ் தோனி தான் மிகவும் பிடிக்கும். அதற்குக் காரணம் விளையாட்டு திறமையும். கிரிக்கெட் மைதானத்தில் அவருடைய அணுகுமுறையும் பிடிக்கும் என கூறியுள்ளார்.
