fbpx
Connect with us

Cinemapettai

19 லட்சம் லைக்குகளை குவித்த ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோ.. அப்படி ஒன்னும் பெருசா இல்லையே!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

19 லட்சம் லைக்குகளை குவித்த ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோ.. அப்படி ஒன்னும் பெருசா இல்லையே!

லேட்டஸ்ட் சென்சேஷனல் எக்ஸ்பிரஷன் குயின் என இளைஞர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ரஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமாவில் தற்போது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் தன்னுடைய சம்பளத்தை 3 முதல் 5 கோடி வரை உயர்த்தி உள்ளார்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தற்போது தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வகையில் அடுத்தடுத்து மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ள ரஷ்மிகா மந்தனா எப்படியாவது தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் தான் என்ட்ரி ஆக வேண்டுமென ஒற்றைக்காலில் அடம் பிடிக்கிறாராம்.

அதற்காக சமீபத்தில் கொடுக்கும் அனைத்து பேட்டிகளிலும் தளபதி விஜய்யை தூக்கி வைத்து பேசி வருகிறார். தளபதி65 படத்தில் அனேகமாக ரஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகைகளுக்கு மத்தியில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படப் போட்டி நடைபெற்றது. இதில் ஒவ்வொருவரும் தங்களது சமீபத்திய புகைப்படங்களை கருப்பு வெள்ளையில் வெளியிட்டனர்.

அதில் ரஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படத்திற்கு மட்டும் சுமார் 19 லட்சம் லைக்குகளை தற்போது வரை குவிந்துள்ளது. ஆனால் அந்த புகைப்படத்தில் அப்படி ஒன்றும் விசேஷமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

rashmika-mandanna-cinemapettai

rashmika-mandanna-cinemapettai

Continue Reading
To Top