Connect with us
Cinemapettai

Cinemapettai

Rashmika

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெரும் மனவருத்தத்தில் ராஷ்மிகா.. காட்டுத் தீயாய் பரவும் நைட் பார்ட்டி

கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி, அதன் பிறகு தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் நடித்த பிறகு வேறு லெவலில் மார்க்கெட்டை பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் ராஷ்மிகா நைட் பார்ட்டி செய்திருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாகவும், அதை வைத்து அவருடைய ரசிகர்கள் கண்டபடி கமெண்ட் செய்துகொண்டிருக்கின்றனர்.

ராஷ்மிகா நைட் பார்ட்டி புகைப்படம்

rasmika-nit-party-cinemapettai

rasmika-nit-party-cinemapettai

Also Read: தளபதி 66ல் கைகோர்க்கும் பலே நடிகர்.. அப்போ குடும்ப கதையோடு அதையும் கையிலெடுக்கும் விஜய்

இவர் தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜயின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ராஷ்மிகா அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘குட்பை’ என்ற படத்தில் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கிறார்.

விகாஸ் பால் இயக்கும் இந்தப் படம் காமெடி கலந்த எமோஷனல் நிறைந்த குடும்பத்தை படமாக உருவாகி இருக்கிறது. இந்த படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகிறது.

Also Read: தளபதி66 படத்திற்கு வில்லனாகும் அஜித் பட வில்லன்.. கோடம்பாக்கத்தை அதிர வைக்கும் புதிய காம்போ

இந்நிலையில் குட்பை படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘தி ஹிப் சாங்’ என்ற பாடலின் வீடியோ சாங் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த பாடலில் தான் ராஷ்மிகா மந்தனா நைட் பார்ட்டியில் செம ஜாலியாக கவர்ச்சியான உடையில் ஆட்டம் போட்டிருக்கிறார்.

ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த பிறகு தன்னுடைய வேலையை காண்பிக்கிறாரா என்று, அவர் நிஜமாகவே லைட் பார்ட்டி செய்து இருப்பது போன்று அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகளை வைத்து ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு கமெண்ட் செய்துகொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் பார்த்து தற்போது ராஷ்மிகா மந்தனா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.

Also Read: ராஷ்மிகா பக்கம் போக பயப்படும் தயாரிப்பாளர்கள்.. நியாயமே இல்லாமல் உயர்த்திய சம்பளம்

Continue Reading
To Top