fbpx
Connect with us

வாழ்த்து சொல்லிய முன்னாள் காதலர்.. அசிங்கப்படுத்திய ரஷ்மிகா மந்தனா.. புகழ் போதையா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாழ்த்து சொல்லிய முன்னாள் காதலர்.. அசிங்கப்படுத்திய ரஷ்மிகா மந்தனா.. புகழ் போதையா?

ரஷ்மிகா மந்தனா டிவீட் ஒன்றுக்கு அவரது முன்னாள் காதலர் வாழ்த்து சொல்லிய நிலையில் அதற்கு ரஸ்மிகா செவி சாய்க்காமல் இருந்தது அவர் மீதான மரியாதையை குறைத்து விட்டது என்றே சொல்லலாம்.

கன்னட சினிமாவில் அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே சக நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரின் மீது காதல் வயப்பட்டார். கன்னட சினிமாவில் அவரும் ஒரு முன்னணி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்பாக தங்களது உறவை தொடங்கி பின்னர் காதலர்களாக மாறி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜோடி தான் ரக்ஷித் மற்றும் ரஷ்மிகா ஜோடி. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என இவர்கள் எடுத்த முடிவுதான் அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

இடையில் ரஷ்மிகா மந்தனா மிகப் பெரிய நடிகையாக உருவெடுத்தார். இதனால் இருவருக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் செய்த திருமணத்தை நிறுத்தி விட்டனர். தற்போது ரஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை. அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் விரைவில் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா தன்னுடைய முதல் 100 மில்லியன் பாடல் இதுதான் என்பதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதை அவரது முன்னாள் காதலர் ரக்ஷித் ஷெட்டி என்பவர் கவனித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும் என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால் இதற்கு ரஷ்மிகா உடனடியாக ரிப்ளை எதுவும் செய்யவில்லை. ரக்ஷித் ஷெட்டி போட்ட அந்த பதிவிற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்த நிலையில், ரஷ்மிகா மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுதத் தொடங்கியது. இதை உடனடியாக கவனித்து ரஷ்மிகா வெறும் ஸ்மைலி போட்டு தன்னுடைய ரிப்ளையை முடித்துக் கொண்டார்.

rashmika-ex-lover-rakshith

rashmika-ex-lover-rakshit

இது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி விட்டது. மேலும் ரக்ஷித் ஷெட்டிக்கு ஆதரவாக கருத்துகள் குவிந்து வருகின்றன. இதனால் ரஷ்மிகா மீது புகழ் போதையில் ஆடுகிறார் போன்ற நெகட்டிவ் ஏற்பட்டுள்ளதால் வருத்தத்தில் இருக்கிறாராம்.

Continue Reading
To Top