ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

இனி எவனாவது Deep Fake பண்ணுவீங்க.! கொம்பனுக்கு கொம்பனான ராஷ்மிக மந்தானா

கன்னடம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்தியாவை சுழற்றி அடித்த நடிகை ராஷ்மிக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கன்னட திரையுலகில் அறிமுகமான அவரை தெலுங்கு திரையுலகம் கெட்டியாக பிடித்துக்கொண்டது. அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடிக்க அவரது கிராஃப் சரசரவென உயர்ந்தது.

தொடர்ந்து, டாப் ஹீரோக்களுடன் போட்டி போட்டு, நடித்து பாலிவுட்டிலும் தற்போது கலக்கி கொண்டிருக்கிறார். இவர் தற்போது, தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விரைவில் படத்தின் படப்பிடிப்பே முடியவுள்ளது.

Brand Ambassador ஆன National Crush

கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரலானது. நடிகைகளின் ‘டீப் பேக்’ ஆபாச வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த தொழில்நுட்பத்தில் நடிகைகளின் முகத்தை ஆபாச நடிகைகள் உடலில் பொருத்தி நிஜமானது போலவே மார்பிங் செய்து உருவாக்கப்பட்டது என்று தெரிய வந்தது.

AI மூலம் இப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “ராஷ்மிகாவின் செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சைபர் கிரைமுக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தில குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்று உள்துறை அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, எனக்கு கொடுக்க பட்ட இந்த அங்கீகாரத்திற்கு, மரியாதையோடும் பொறுப்போடும் நடந்துகொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News