பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை பார்த்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கிறார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் காதலியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது 29வது பிறந்த நாளை திங்கட்கிழமை கொண்டாடினார்.

அனுஷ்கா கோலியுடன் குதுகலாமாக பிறந்த நாளில் கேக் வெட்டிக் கொண்டாடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அத்துடன் நீண்ட நாட்கள் பழகி கனிந்துவிட்ட காதலை கோலி அனுஷ்காவிடம் சொல்லி அசத்துவார் என்றெல்லம் பேசப்பட்டது. கூடிய சீக்கரம் கல்யாணத்திற்கான தேதியும் குறிக்கப்படும் என்றும் எதிர்பார்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் அனுஷ்கா பிறந்தநாளில் காலையிலேயே போன்செய்து வாழ்த்துச்சொல்லி மயக்கிவிட்டார். ‘எனக்கு எப்போதும் பிடித்த ஒரே நடிகை அனுஷ்கா. உங்களை நேரில் பார்க்கணும்’ என்றும் அப்ளிகேஷன் போட்டிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு தோல்விகளைக் குவித்துவரும் நிலையில் கோலி காதலியின் பெயரைக்கூட நினைவில் கொள்ள முடியாத அளவிற்கு சோகத்தில் இருக்கிறார். கோலி அனுஷ்காவிடமிருந்து விலகியிருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி இருவருக்கும் இடையே புகுந்திருக்கிறார் 19 வயது பையன் ரஷித்!