Connect with us

Sports | விளையாட்டு

சீனியர் வர்ணனையாளரை ப்ரோ என அழைத்த ரஷீத் கான்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

ரஷீத் கான்

ஆப்கானிஸ்தானின் இளம் லெக் ஸ்பின்னர். 19 வயது தான் ஆகிறது. எனினும் இன்றைய கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட் டாபிக் இவர் தான். உலகெங்கிலும் டி 20 லீக்கலில் மோசட் வான்டட் பிளயர். இந்த ஐபில் சீசனில் பவர் பிளே, மத்திய ஓவர், இறுதி கட்டம் என அனைத்திலும் அசத்தினார்.

பங்களாதேஷுடன் டி 20

சமீபத்தில் ஐபில் முடிந்ததும், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மோதும் டி 20 போட்டி டெஹ்ராடூனில் நடந்தது. மூன்று போட்டியிலும் அபாகனிஸ்தான் வெற்றி பெற்றது. ரஷீத் கான் 3 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். மேலும் வரும் ஜூன் 14 இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்த ஆப்கானிஸ்தான் அணி.

ஹர்ஷா போக்லே

Harsha Bhogle

வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரஷீத் கானுக்கு பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டார். அதிலும் குறிப்பாக கடைசி போட்டியில் இறுதி ஓவரில் ஜெயிக்க ஒன்பது ரன்தேவை என்று இறந்ததை அடிக்க விடமால் தடுத்ததை வெகுவாக பாராட்டினார். மேலும் ரஷீத் நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளார் என்றும் கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரஷீத் கான் ” நன்றி ப்ரோ” என்று கூறினார்.

இந்த பதிலை வைத்து தான் நம் நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். 37 வயது வித்தியாசம் உள்ள ஒருவரை எப்படி இவர் ப்ரோ என அழைக்கலாம் என ஆரம்பித்தனர். இதனை வைத்து அதிகமாக கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

எனினும் ரஷீத் கானை காப்பாற்றும் வகையில் ஹர்ஷா மீண்டும் ஒரு ட்வீட் தட்டினார்.

“ரஷீத் நீ ப்ரோ என்று அழைப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. நீ அப்படியே அழைக்கலாம். பெங்களூரு டெஸ்ட் போட்யின் பொழுது உன்னை சந்திப்பதில் ஆர்வமாக உள்ளேன்.” என்றும் கூறியுள்ளார்.

இதுவரை சச்சின், சேவாக் மற்றும் பலர் ட்விட்டரில் பாராட்டிய பொழுது சார் என்று தான் உபயோகப்படுத்தினார் ரஷீத். எனினும் மீண்டும் எமோஜியுடன் நன்றி சார் என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top