Sports | விளையாட்டு
ஐபில் சீசனில் இந்த 3 வீரர்களின் விக்கெட்கள் தான் மிகவும் ஸ்பெஷல் – மனம் திறந்த ரஷீத் கான் !
ஆப்கானிஸ்தானின் இளம் லெக் ஸ்பின்னர். உலகம் முழுவதும் உள்ள டி 20 லீகுகளில் மோசட் வான்டட் பிளேயர். கடந்த சீசனில் இருந்து இவர் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஐபில் சீசனில் பவர் பிளே, மத்திய ஓவர், இறுதி கட்டம் என அனைத்திலும் அசத்தினார். சில போட்டிகளில் அதிரடி பாட்டிக்கும் செய்தார். இந்த சீசனில் மொத்தமாக 21 விக்கெட்டுகள் எடுத்தார்.
“ஆப்கானிஸ்தான் அதிபரின் வாழ்த்து என்னை மிகவும் மகிழ்ச்சியை தந்தது. அவருக்கு அடுத்தபடியாக எங்கள் நாட்டில் நான் மிகவும் பிரபலமான நபராக ஆகிவிட்டேன்.
கொல்கத்தாவுடனான எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்று விட்டு டீம் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தோம். அந்தநேரத்தில் என் நண்பர்கள் சச்சின் சார் என்னைப் பற்றி புகழ்ந்து கூறியிருந்த ட்விட்டர் கருத்தின் ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பியிருந்தனர். சச்சினுக்கு என்ன பதில் அனுப்பலாம் என ஒன்று முதல் இரண்டு மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்ன எழுத வேண்டும் என்பதே தெரியவில்லை. இறுதியில் அவருக்கு பதில் அளித்தேன்.
இந்த ஐபில் போட்டியில் நான் 21 விக்கெட்கள் வீழ்த்தினேன். அதில் 3 விக்கெட்கள் மிகவும் சிறப்புக்குரியவை. அவை விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், எம்.எஸ். தோனி ஆகியோரின் விக்கெட்களாகும். அந்த விக்கெட்களை எடுத்தபோது நான் மிகவும் சந்தோசம் அடைந்தேன். அவர்கள் மிகவும் சிறந்த ஆட்டக்காரர்கள். அவர்களது விக்கெட்களை வீழ்த்தியது என்றென்றும் நினைவில் இருக்கும்.
இந்தியாவுக்கு எதிராக எங்களது முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளோம். இது எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடுகளின் கனவாக இருக்கும். அந்தக் கனவு இப்பொழுது நிறைவேறப்போகிறது.
