Sports | விளையாட்டு
ஐபிஎல் வரலாற்றில் யாருமே அசைக்க முடியாத சாதனை செய்த வீரர்.! குவியும் பாராட்டு மழை
ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதின.
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சாகா 87 ரன்களும், டேவிட் வார்னர் 66 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தனர்.
பின்னர் 220 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல் 19 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே குவித்தது.
சன் ரைசர்ஸ் அணி சார்பாக ரசித் கான் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகனாக, சஹா தேர்வானார்.
இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 7 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார் ரசித்தான். இதுமட்டுமின்றி மொத்தம் 4 ஓவர்களில் மொத்தமாக 17 டாட் பால் வீசியுள்ளார்.

rashid-khan
