fbpx
Connect with us

காசுக்காக அந்த கேவலமான வேலையை நான் செய்ய மாட்டேன்.. எதைக் கூறுகிறார் ராசி கண்ணா

raasi-khanna-cinemapettai-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காசுக்காக அந்த கேவலமான வேலையை நான் செய்ய மாட்டேன்.. எதைக் கூறுகிறார் ராசி கண்ணா

புதுடில்லி பிறப்பிடமாகக் கொண்டவர் ராசி கண்ணா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.  மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்திப் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

2018-ல் வெளிவந்த இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். தற்போது அரண்மனை 3, அருவா போன்ற படங்களிலும் புக்கிங் ஆகி தமிழ்சினிமாவில் நல்ல ஒரு இமேஜை உருவாக்கி விட்டார் ராசி கண்ணா.

இவர் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் பணம் தனக்கு முக்கியம் இல்லை என்றும், தரமான கதைகளை மட்டும் தேர்வு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கதை மோசமாக இருந்து பணம் அதிகமாகக் கொடுத்தாலும், நான் மறுத்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

கதை நல்லா இருந்தும் படம் ஓடுவது இல்லையே என்று கேட்ட கேள்விக்கு, நீங்கள் கூறுவது சரிதான் கதை கேட்கும்போது சுவாரசியமாக இருக்கும் ஆனால் அது படமாகி வெளிவரும் போது, நாம் எதிர்பார்த்த சுவாரசியம் அதில் இல்லாமல் கூட போய் விடலாம்.

இதனால் அந்த படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதனால் பணத்தை நம்பி என் சினிமா வாழ்க்கை இல்லை என்றும் நல்ல கதைகளுக்காக தனது சம்பளத்தை கூட குறைத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top