Connect with us
Cinemapettai

Cinemapettai

vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திடீரென சம்பளத்தை உயர்த்திய விஷால் பட நடிகை… இதுதான் காரணமாம்.

தமிழ் சினிமாவில் மற்ற மொழிகளில் இருந்து வரும் நடிகைகள் தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ் சினிமாவிற்கு புதுவரவாக வந்தவர்தான் நடிகை ராசி கண்ணா. இவர் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

இப்படத்தை அடுத்து ராசி கண்ணாவிற்கு தமிழில் அடுத்தடுத்து புதிய படங்கள் குவிய தொடங்கியது. தொடர்ந்து விஷாலுடன் அயோக்கியா, ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ராசி கண்ணாவுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

இதன் காரணமாக இவர் கைவசம் தற்போது ஏராளமான தமிழ் படங்கள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், ஆர்யாவுடன் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இதுதவிர தெலுங்கில் சில படங்களும், ஹிந்தியில் இரண்டு வெப் சீரிஸ் மற்றும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன.

raashi khanna

raashi khanna

மேலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருவதால் தற்போது ராசி கண்ணா தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக வாய்ப்புகள் வருவதால் இது போன்று திடீரென சம்பளத்தை உயர்த்தி சில நடிகைகள் திரை உலகில் இருந்து காணாமல் போயுள்ளனர்.

அதிகமாக பட வாய்ப்புகள் வருகிறது என்பதற்காக சம்பளத்தை உயர்த்தி பட வாய்ப்புகளை குறைத்துக்கொள்ள வேண்டாம் என ரசிகர்கள் மற்றும் ராசி கண்ணாவுக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top