இந்தியாவில் கல்லூரி மாணவி ஒருவரின் நோயை குணமாக்குவதாக கூறி அவரை கடத்தி சென்று கற்பழித்த சாமியாரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

மகாராஷ்டிராவின் பல்கார் நகரில் திரிம்பக்முனி மங்கள்முனி தாஸ் என்னும் சாமியார் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

சாமியாரின் ஆசிரமத்துக்கு 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வந்துள்ளார். தனக்கு மூல நோய் உள்ளதாகவும் அதை சரி செய்யவேண்டும் எனவும் சாமியாரிடம் மாணவி கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கு சாமியார், நோயை குணமாக்குவதோடு நல்ல வேலை வாங்கி தருவதாகவும், அவர் திருமணம் செய்து கொள்ள நல்ல மாப்பிள்ளையை காட்டுவதாகவும் மாணவியிடம் உறுதியளித்துள்ளார்.

பின்னர், மாணவியை அங்கிருந்து குஜராத்துக்கு கடத்தி சென்ற சாமியார் வீட்டில் அடைத்து வைத்து ஐந்து நாட்கள் தொடர்ந்து கற்பழித்துள்ளார்.

மேலும் சாப்பிட உணவும், தண்ணீரும் தராமல் கொடுமைப்படுத்தியுள்ளார்.

பின்னர் அந்த மாணவியிடம், உன் உடலில் பேய் உள்ளது எனவும் அதை விரட்டவே கற்பழித்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு நைசாக அங்கிருந்து தப்பித்து சென்ற அந்த மாணவி இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சாமியார் மங்கள் முனிக்கு உதவி செய்த 3 பேரை கைது செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள சாமியாரை தேடி வருகிறார்கள்.